வெள்ளாவியில்
வெளுத்த..
என் ஊதாக் காதல்
உனக்காக.
உன்னை பார்த்ததும்
எனக்குள் உணர்வுகள்
வரைகிறது--காதல்
என் இரவுகளில்....
காதல் மழை
சொட்ட சொட்ட
நனையும்,
உன் நினைவுகள்......
பகலெல்லாம் பனிக்கட்டியாய்
உறைந்து என்னுள் தங்கி
தாளம் போடுகின்றன
உல்லாசமாய்.....
எல்லையில்லா
உன் காதல் உள்ளத்திலும்...
கள்ளமில்லா
முன்கோபமாய்.....
உன்னை கேட்காமல்
உனக்கு அடங்காமல்
சட்டென்று வழிந்தோடுகிறது
நிமிடங்களில் மறையும்
ஓர் எரிமலைக்குழம்பு
உன் குணங்களை
தடவி...தழுவி.....
நிறைவாய்ப் பூத்திருக்கிறது
வண்ண'மை'க் காதல்
இதழ் விரித்து
மறைக்கும் உண்மையை
எப்போதும்
உன் விழிகள்
இமைக்காமல் ...
கட்டிக் கொடுத்து விடுகிறது
என்னிலும்
இளமைகளில்
ஆசையாய்.......
முதுமைகளில்
பாசமாய்....நம்...
வசமிழந்து வழிந்தோடுகிறது
காதல்....
முத்தங்களுக்கு
முகம் வரைந்து
அழகு பார்க்கிறது
என் காதல்
ஒரு மழைக்கால
பறவை பறந்து வந்து
உன்னை எனக்கு காட்டி
முடித்தும் வைக்கிறது
அழைத்தும் செல்கிறது
துறவறத்துக்குள்...என்னை...
பறவை பறந்து வந்து
உன்னை எனக்கு காட்டி
முடித்தும் வைக்கிறது
அழைத்தும் செல்கிறது
துறவறத்துக்குள்...என்னை...
வார்த்தைகளாய்...
நீ விட்டெறிந்த
அகம்பாவக் காதலை...
மன்னித்தாலும்... மறந்து.......
ஜீரணிக்க முடியாமல்
தவிக்கிறது....
என் குழந்தை மனசு
தான் உள்ளது....
நீ என்னை
சுமந்து செல்லும்
எனக்கு பிடித்த
உன் காதல்....
ஒவ்வரு நதிக்குள்ளும்
மையம் கொண்டுள்ளது
உன்னை போல்....
தன்னைத் தானே
விழுங்கும் ஒரு சுழல்...
மையம் கொண்டுள்ளது
உன்னை போல்....
தன்னைத் தானே
விழுங்கும் ஒரு சுழல்...
பாதுகாக்கவே
என்னிடம்
கொட்டிக் கிடக்கிறது
காதல்......
எந்த பூக்களைப்
பார்த்தாலும்...............
மாலையாய் தொடுத்து
உன் கழுத்தில்..
போட்ட பின் தான்
கலைகிறது.....
என் கற்பனை...
பார்த்தாலும்...............
மாலையாய் தொடுத்து
உன் கழுத்தில்..
போட்ட பின் தான்
கலைகிறது.....
என் கற்பனை...
இடைவெளி இல்லாமால்
இறுக்கி கட்டிக் கொள்ளும்
கணவன் - மனைவி உறவிலும்
இருக்கத்தான் செய்கிறது
நல்ல தோழமையுடன்
கூடிய புரிதல்களின்........
ஆளுமையில்லா இடைவெளி.....
இறுக்கி கட்டிக் கொள்ளும்
கணவன் - மனைவி உறவிலும்
இருக்கத்தான் செய்கிறது
நல்ல தோழமையுடன்
கூடிய புரிதல்களின்........
ஆளுமையில்லா இடைவெளி.....
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..