Thursday 13 November 2014

ஆசானுக்கு வாழ்த்து



ஆசான் என வந்த சகோதர பிரியத்திற்கு ஆனந்த அவதரித்த நாள் வணக்கங்கள்

அன்பின் மொழிகள்... தமிழா.....தாயா..... அதன் பகிர்வுக்கு தேவை உதிரமா....உறவா........

என் சிறு பிள்ளைத் தமிழ் பார்த்து....மொழியார்வம் கொண்டு..என் நட்பை ஏற்றுக் கொள்வீர்களா..என்று.. இதே முகம் தாங்கி வந்தது.. எங்கள் ஆசான் அறிமுகம்...

மெல்ல மெல்ல ...முகமறியா து..மொழி வளர்த்த நட்பில் சென்ற வருடம் இந்த திருநாளில்....தான் எங்கள் ஆசானின் நட்பின் குரல் கேட்டேன்..நள்ளிரவு வாழ்த்துச் சொல்லி..........

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து அலைபேசி அழைத்ததில் .... ஆரம்பித்தது..பூர்வ ஜென்மத்தின் புதுவித தொடர் பாசங்கள்... தாய்மொழி ..புதுபித்து தந்த சொந்தமிது...

அம்மா ..என்றழைக்க வைத்த ...அழைத்த குரலில் வரும் ஆனந்தம்...........எங்க சார் என்று சொல்லும் போதும் வருகிறதே....

தன்னை விட 17 வருடங்கள் இளையவளான..என்னை.... தோழி எனும் நட்பில் இணைத்து....... என் கருத்து கேட்கையில் தங்கையெனவும்.... என் அன்பு பாராட்டுகையில் தாயெனவும்.... என்னைத் தலைகுட்டி அதட்டுகையில் சகோதரன் எனவும் ..பெருந்தன்மை பிரியங்கள் கோர்த்து வந்து....

தகப்பனுக்கும் மேலான அன்பையும் பாசத்தையும் என் மேல் காட்டி... கவலை மேகம் சூழ,,கலங்கும் விழி நீர் வழியும் முன்... தன் மனம் கலங்கி.....தீர்வு கண்டு...கன்னம் தாண்டும் அதை ஆனந்த கண்ணீராய்..மாற்றும் ..சக்தி எங்கள் சாரின் அன்பிலும் பாசத்திலும் உண்டு.....

மடிசுமக்காத அன்னை தந்து மனம் சுமந்த சொந்தங்கள் கொடுத்து.. இன்னுமோர் தாய் வீடு கொடுத்தீர்கள்.... தங்களைப்போல் எல்லாரையும் என்னைக் கொண்டாட வைத்தீர்கள்....

ஏழு ஏழு ஜென்மங்களும் இணைந்தே பிறந்தோமோ எனும்..உயிர் பிணைப்பு தந்தீர்கள்....

எங்க டாக்டர் ..எங்க டாக்டர் என்று..எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காமல்...தலை மேல் வைத்து கூத்தாடும் ..கள்ளமில்லா பிள்ளைப் பாசம் கண்டேன்... எல்லாவற்றையும் என்னிடம் சொல்லும் உங்கள் நம்பிக்கை......

உயிராய் நினைக்கும் தமிழ்ஆளுமையை...மொழிவடித்து..என்னிடம் கேட்பீர்கள்...

தவழும் என் தமிழ் குழந்தையிடம்.. வளர்ந்த தங்கள் அன்னை தமிழ்... அழகாயிருக்கா எனக் கேட்பது போல்.... ஆனந்த நிமிர்வு கர்வத்துடன்..நானும் வாதிட..சிரித்துக் கொண்டே...ரசிக்கும் உங்கள் தாய்மை மனது...

உங்கள் மொழி கருத்து சொல்ல எனக்குத் தகுதியிருக்கா என நான் யோசித்து மறுகும் போதெல்லாம்...எங்க டாக்டர் சொன்னா சரியா இருக்கும் என்று..என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கையாய்...வேரூன்றுவீர்கள்...

தாயாய்...உயிராய்...மதிக்கும் உங்கள் தமிழ்மொழிக் காதலை நானறிந்த போதும் எதிலும் எங்கள் ஆசானின் மொழி முன்னிற்கும்...என உணர்ந்த போதும்.... எதையும் தாங்கும் சக்தி ..எங்கள் ஆசானுக்கு உண்டு என நானறிந்த போதும்.... எங்க சார் க்கு எப்போதும் சிகரம் மட்டுமே,,குறி எனப் பார்த்து நான் வாதிடும் போது.......உள் ஒளிந்த என்பாசம் புரிந்து..பெருமைப்படும் தங்கள் பிரியம்.....

எங்கள் ஆசான்

அன்பில் நிறைகுடம்.....

கருணையில்..கனிவில்... கடவுளும் வணங்கும் பிள்ளை மனம்....

தன்னிடம் கேட்காதவர்களுக்கு கூட...வலிய சென்று உதவும் பண்பில்.....கேட்டால் மட்டுமே கொடுக்கும் வள்ளல்.. கர்ணனையும் மிஞ்சும் தகப்பன் குணம்....

எத்தனை இடர் வந்தாலும் எத்தனை பேர் எதிர்த்தலும் தனிமனிதனாய் எதிர் கொண்டு...தன் துணிச்சலுடன்.சிங்கஆளுமை நிர்வாகத்திறன் கொண்டு.. நிமிர் திமிர் கொள்ளும்.. ராணுவ வீரனையும் மிஞ்சும்...நெஞ்சுரம்

தன் ஆசான்...தன் ஆசிரியர் ,,எனும் பணிவில்... எத்தனை வெற்றி மாலைகளை...வெற்றிச் சிகர மனிதர்கள்...அருகில் இருந்து அணிவித்த போதும்....அத்தனையும் தலைகுனிந்து வாங்கி.....தலைக்குமேல் கனமாய் கொள்ளாத..பக்குவ மனம்

எல்லோரையும் தன்னைப்போல் நினைக்கும் தாய்மை மனம்.... துரோகியையும் ..நன்றி மறந்தவனையும்...இரக்கப்பட்டு மன்னிப்பு வழங்கி...கைகொடுத்து உயரம் தரும்.....கனிவு மனம்... தனக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல்.. அள்ளி வழங்கும்...ஆனந்த மனம்...

தன் ஒரே பிள்ளை..எங்கள் செல்வ முல்லையை... கண்ணுக்குள் வைத்துஅடைகாத்து... தாயுமானவனாய்...மனக்கருப்பை சுமந்து.... பெருமைபடும் பேரின்ப மனம்....

என எதிலும் சிகரமே....தொடும் அவரின் பண்பின் மனம் என்பதை....எட்ட நின்று பழகியவரும்...கிட்ட வந்து உறவாடிய தோழமைகள் அனைவரும் அறிவர்

உயரம் என்றில்லை....வேரிலிருந்து....இலை வரை தனித்தனியே தான் பயன்படும் பனை போல்....

அவதார பிமப்மாய்...அனைவரையும் ..கரம் அணைத்து குணசெல்வம் குமிந்த ...தாங்களை....

எத்தனை ஜென்மங்கள் தவம் செய்தேனோ... இந்த ஜென்மத்தில் குருவென..தகப்பனென..சகோதரனென.... தாய்மானவனாய்.....பெற்று தங்கள் விரல் பிடித்து.. தாங்கள் அமைக்கும் பக்குவ பாதையில்.... நான் நடக்க......

நான் வணங்கும் அன்னையின் முன் மண்டியிட்டு சரணமைடைந்து..... மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லி...வணங்குகிரேன் சார் தன் பிம்பமாய் ..தங்களை....என் முன்...காட்டியமைக்கு

ஆயிரம் ஆண்டுகாலம் தாங்கிய் இராஜ இராஜ சோழ மன்னன் போல் வாழ்வாங்கு வாழும் எங்கள்..........

இதழியல் செம்மலை...இறைத்தமிழ் வேந்தரை.... செம்மொழிச் செல்வரை................எல்லாவற்றிற்க்கும் மேலான

எங்கள் சாரை...............வாழ்த்த வயதில்லை.....

என்றும் ..வணங்குகிறேன்.......ஆசானே...........!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..