Thursday 13 November 2014

பசும்பொன் தேவனெனும் சிங்கம்


தென்னாட்டு தங்கம்...பசும்பொன் தேவனெனும் சிங்கம்

வீரத்தின் திருமகனாய்..விவேகப் பெருமகனாய் கொடைவள்ளல் கர்ணனாய்..... சிம்மசொப்பனம் ஒன்று ..... உயிர்த்து... நீத்த...அவதாரப் பெருநாள்.. .107 வது குருபூஜை திருநாள்...தேவர் ஜெயந்தி

குலம் காக்க வந்த..தியாக பிரமமே உம் வரலாறு சொல்லி...வீரம் எடுக்கிறதய்யா.... இங்கு விளையும் விதைநெல் உயிர்கள்

பிறந்தவுடன் தாய் சொர்க்கம்போக தந்தைவெறுப்புகுள்ளாகி.....

இஸ்லாமிய தாய்பால் அருந்தி கிறித்துவ கூடம் படித்து.....வளரிளம் பருவம் கண்ட மதநல்லிணக்கப் பேரழகே...

தனக்கென எதுவும் கொள்ளாமல் தேசியமும் ..தெய்வீகமுமே தன் கொள்கை என வறியவரை கண்ட போதின்றி..... வறுமை எனக் கேட்டபோதெல்லாம்...எவரும் கேட்காமல் வாரி வாரி இறைத்த வள்ளல் பெருந்தகையே

பதவி...பட்டம் ..பொன் பொருளாசை எதுவுமின்றி..தனக்கென குடும்பமும் இன்றி என் நாடே என் குடும்பம் என...மக்கள்நலன் காக்க மண்ணுயிர் விட்ட ..சுதந்திர தியாகியே

வீர சிம்மம் நேதாஜியின் விருப்ப சாரதியே பார்வடு பிளாக்கின் ...பாயும் புலியே

எத்தனை எத்தனை சிறைகண்டாய்.... எது உன்னை கட்டிப் போட முடிந்தது....

மக்களின் மனதில் நீங்கா காவலனாய் நீ வலம் வருகையில்

தொடைக்கறி அறுத்து சதைக்கறிக்கு கொடுத்து தனை நம்பி வருவோரின் தன் மானம் எனக் காக்கும்.....மறவர் குல மூத்தோனே

தேவனின் பெருமை...அவன் வீரத்திலா...தீரத்திலா இல்லை இல்லை....

என்றும் அவன் தம் வளமை அவன் வாக்கு சுத்தத்தில் தான்

மண்ணில் பிறக்கும் மகா ஆத்மாக்கள்.... பிறந்தநாளிலே தான் இறந்து ஜெயந்தி காணுமாம்...

நீர் ஓர் மகா ஆத்மா....

வாழ்ந்தபோதும்...நூற்றாண்டு கண்டு எழுந்தபோதும் ஓரு குலத்துக்குள் அடக்க முடியுமா அய்யா...உம்மை

நீர் தேசிய பொது சொத்து

உம் பெயர் சொல்லி..உம் வரலாறு சொல்லி உம் திருக்கோவில் வந்து...பிறந்த பிள்ளை கிடத்தி வணங்குகிறோம் தலைமுறைத் தலைவனே

வீரம் சொல்லி விழித்தெழச்செய்யுங்கள்.... மானிட வேர்களை...தேசிய திருமகனே


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..