Saturday 22 November 2014

நண்பன் எனும் காட்டுத்தீ

நண்பன் எனும் காட்டுத்தீ Mohana Sundaram Meenakshi Sundaram

இதுவரை பார்த்ததில்லை
இன்று வரை அதிகம் அளவாடியதும் இல்லை

சர்வதேச ஆண்கள் தினத்தில்
இன்றே முதலாய் குரல் கேட்டது

பள்ளித்தோழமையாய்...
பக்கத்து வீட்டு நண்பனாய்

யதார்த்தம் வழிந்தோடும்
மதுரை தமிழனின் இயல்பின் குரல்

முன்பு அதிகமாய் பேசாவிடினும்
எப்போதும் ஓர் மதிப்பு உண்டு

அணு மின் பாரதிகளின் தகப்பனாய்
பார்க்கும் போது தாயுமானவன் என்ற கனிவும்

ஏன் இப்படி இருக்க வேண்டும்
என்று யோசிக்காது உன் சிந்தை
ஏன் இப்படி இருக்க கூடாது (y not) ..என்றே
எல்லைதாண்டி கருத்திடும் உம் கவனம்

எழுத்துக்களில்..செயல்களில்
சிந்தைகளில்..ஆண் பெண் எனும் உணர்வு நிலையை
எளிதாய் கடக்கும் உன் கண்ணியம்

நான் இப்படித்தான் என்று ஆணியடித்து தன்னை
தன் வழியில் நிலை நிறுத்த
எத்தனை பேரால் இங்கு முடியும்

போலியாய் சிரித்து ..பொய்வேஷமிட்டு பழகி
தப்பை கூட பெருமையாய் செய்யும்
மாக்கள் மத்தியில்....

தன் திமிராய்..தன் ஆளுமையாய்..தன் கண்ணியமாய்
இது தான் நான் எனும் பறைசாற்றும் மனிதன்

ஒருமுறை அவரின் ஒரு கவிதைக்கு நான் புகைப்படம் எடுத்து கொடுக்கும் போது......

இல்லை இது கொஞ்சம் அதிகபடி என்றார்....பெண்களே போடுகிறார்கள் இது போன்ற படம்...நீங்கள் போடலாமே என்றதற்கு...இல்லை..என் பெண் தோழிகளுக்கு நான் செய்யும் மரியாதை என்றார்.

அந்த ஒரு செயலில் ...அவரின் தோழமை மதிப்பை என்னில் பல்மடங்காக்கியது

ஒரு மணி நேரம் கடந்து பேசியதில் வேறாய் வேறுபட்டு
தெரியவில்லை ..நண்பா....நிமிடத்துளிகள்

ஆச்சரியப்படவைக்கிறது..ஆர்வத் தேடலும்..
தெளிவு சிந்தையும் அதை ..குரலுயர்த்தி கூச்சலின்றி...நிதானமாடும் பக்குவமும்

மனிதனை ..மனிதம் என பார்க்கும் ஆத்ம மனம்

சில நொடிகள்..சில நிமிடங்கள்...
சில மணித்துளிகள்...நமக்கு பொக்கிஷமானவை

நம்மில் பசுமரத்தாணியாய் பதிபவை....

அஃது போல் இன்றைய மணித்துளி நண்பா....

உலக ஆண்கள் தினத்தில் ..ஓர் உன்னத நண்பனுடன்
மகிழ்ச்சியாய் உரையாடியது ..மனதிற்கினிய நிம்மதி

சமுதாய வேள்வி தரும்
உங்கள் கனவுகள் வெற்றிப்படிக்கட்டு காண

அன்னைவேண்டி வாழ்த்துகிறேன்

வாழ்க வெல்க தோழமையே.....
தொடருவோம் தோழமை எனும் உயர்வுசொந்தமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..