Friday, 9 January 2015

வீழ்ந்தான் கொலைவெறி கொடுங்கோலன்


பிரேதமாகிய பிணந்திண்ணி

அதிபன் என அரசாளவந்தனெல்லாம்
மக்கள் தின்றால்...........
மயானஓலமாகியது
பெளத்தம் அணைத்த பசுமைத்தீவு

ஏனிந்த கொலையாட்டம்
என்ன கேட்டான் என் தமிழன்
நிற்கும் நிலம் தானே கேட்டான்

அதற்கா இந்த பாதகம்

வீதிக்கு கன்னி இழுத்து
ஆடை அறுத்தெறிந்து
கைகால் பின் கட்டி
கதற கதற கற்பு அழித்தீரே
பிணமென்று ஆனபின்னும்
மிருகமென புணர்ந்தீரே
பாவப் பதரே

சேலைவிலக்கி பிள்ளை
செந்நீர் பாலருந்த ....தாயவள் கொன்று
பேய் பெற்ற மகவு நீர் என மார்தட்டினீரே

இருக்கும் தெய்வமெல்லாம் அரக்கம் பொறுக்காமல்
அழக்கூட திரணியற்று கல் உறைந்ததே....

சவக்குழி தோண்டி இருட்டுபொந்தில்
உணவு நீரின்றி...மரணநொடியில் என் மானிடன் உயிர் வெல்ல
கடும் துப்பாக்கிரவைப் பொழிவால்..பொசுக்கி சிரித்தீரே

போர்விதி எதுவுமில்லாமல்...பச்சிளம் குழந்தைகள் கொன்று
பாவக்கணக்காய் வாழ்நாள் சேமித்தீரே

இன்னும் உம்மை இயற்க்கை சீற்றமாய் அவதாரம் எடுத்து
எப்படி விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது
தன்மான தாய்பூமி

பிச்சியாகி..நாடுதுறந்து ..வீடு இழந்து..சொந்தம் தூரமாகி
அகதியெனும் ஆயுள்தணடனையாகி....
மானமிழந்த மனித பிடி சாபம்.....
இன்று பிரேதமாக்கியுள்ளது ஓர் பிணந்திண்ணியை

எழுச்சியெழுந்த எம் இன சிங்கத்தை சூழ்ச்சி செய்து
கொன்ற கையாலாகா துரோகியே
அவர்தம் பச்சிளம் பாலகரை உண்ண வைத்து உருக்கொலைத்து ருசித்த ...சவக் கழுகினமே

தொட்ட உன் வீழ்ச்சி..தொடர்ந்து மண்ணோடு நீ மக்கும் வரை
தீராது எங்கள் ரத்தம் கொதிக்கும் தன் இன மான உணர்வு

காட்டிடை ராட்சச கழுகுகூட்டத்தில் இருந்து ....ஓர் நல்லதொரு
கருடன்..விஷ்ணு அவதாரமாய் வரமாட்டானா
என்றே நம்பிக்கையாட

நம்பி நம்பி..ஏமாறும் தமிழன்
.இன்றும் உன்னை நம்பி....
தன் தோள்மேல் உன் கால் தாங்கி
உன்னை ஏற்றி விட்டிருக்கிறான்

காற்றோடு வாக்குறுதி கரைப்பாயா
இல்லை
காற்றாய் அவன் சுவாசம் காப்பாயா

கற்பு கொடு....கையளவு இடம் கொடு
உயிர் வாழலின் சுதந்திரம் கொடு
அது போதும்....

மாயனக் காட்டை..நீ உழுது செப்பனிட்டு
மலர்த்தோட்டமிடாவினும்

இனியும் உன் பூமிக்கு
உரமாக்காதே....சிங்களனே
என் தமிழனை.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..