Monday, 19 January 2015

கனிவுச்சுடரே போற்றி

அமுத வாழ்வு தரும்
அன்பெனும் கனிவுச்சுடரே போற்றி

அமுத ஆனந்தம் தரும்
நேர்மையெனும் ஒளிச்சுடரே போற்றி

அமுத வெற்றிகள் தரும்
கருணையெனும் வழிச்சுடரே போற்றி போற்றி

நினைவெனும் திருப்பாற்கடலை நித்தம் உன் அணைவெனும்
சர்பம் எடுத்து நிதானம் கடைய சொல்லவியலாய் நிம்மதியாய் உடன் சூழ்ந்து...அமுதவரமளிக்கும் ஆயுள் பிரிய அன்னையே

என்றும் நின் மலர்த்திருவடி சரணம் சரணம் பரிபூரண சரணம் தாயே...

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..