பொங்கலெனும்பெயர் சொல்ல
உச்சிமுதல் உள்ளங்கால் வரை சுவைநரம்பு விழித்து
இன்பம் தித்திக்கும்.........இனிப்புத் திரு நாள்
செங்கதிரோன் அருள்புரிய
செங்கழனிஉழுது விதைத்த
செந்நெல்கதிரறுத்து
செங்கரும்புச் சுவையோடு
செம்மண்குழைத்து சுட்ட
புதுப் பானை பொங்கலிட்டு
உலை பொங்க உவகைபொங்கி
பொங்கலோ பொங்கலென்று
நாபி மணக்க கத்தி மகிழ்ந்து
சந்தோசம் இனிக்கும் ருசிப் பெருநாள்
ஆடிபட்டமிட்ட விதைநெல் விளைச்சல் மகிழ்வை
பசிநோய்நீக்கும் மருத்துவ உழவன்..பரிசாய் பெற்று
எலும்புதோல் உடம்பேந்தி எல்லோருக்கும் அன்னமிட
பழையன கழிக்க ஒருநாள்
பகவலன் நன்றிக்கு ஒருநாள்
வாயில்லா காளைத்தோழனுக்கு மறுநாள்
உறவோடு கூடி மகிழ கடைநாள் என
நால் வகைப் பெருநாளாய்...
நம் பண்பாடு சொல்லும் கனிச்சுவை கலாச்சார நாள்
பருக பருக தீரா ஆயுள்தாகம் தந்து
வாழ வாழ இன்னும் வாழ்நாள் கேட்டு
ருசிக்க ருசிக்க பசியடங்கா சிந்தையுடன்
மார்கண்டேய வரம் தரும் செம்மொழியாம் எம் தாய்மொழித் தமிழன்னை பண்பாட்டின் மடிபிறந்து
பருத்திநூல் சேலைதழுவி
பஞ்சுவெண் வேஷ்டி கட்டி
பசியென்று வருவோரை விருந்தோம்பி விடியல் காணும்
எம் தமிழ் மண தங்கங்களுக்கு
பொன்கழஞ்சு மகிழ்வாய்..பாலோடு பொங்கிவரும்
தை மாத மகநாளின் மகத்தான வாழ்த்துக்கள்
திருநாளும் திருவிழாவும் மனிதனை குழந்தையென புதுப்பிக்கும்..புணர்ஜென்மபெருநாளே
சந்தோஷ பிறப்பெடுக்கும்..மழலைமனங்களுக்கு
இனிய இனிப்புநாள் நல்வாழ்த்துக்கள் ..தோழமைகளே..!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..