Monday, 12 January 2015

கனிவாய் வந்த ஆளுமையே

அன்பெனும் உருவாய் நிறைந்த திருவே

கருணையெனும் கனிவாய் வந்த ஆளுமையே

கலங்காத மனத்தினளாய்
உறுதியெனும் இரும்பினளாய்
கவலையில்லா இமையினளாய்
உருக்குலையாய் உவகையினளாய்

எதுவந்து எதுகடந்த போதும்
எட்டி நின்று பார்க்கும் உள்ளத்தினளாய்
விழியணைக்கும் நீர் சுண்டும் தீரம் கொடு அன்னையே

என்றும் உன் ஒளிசூழ் உலகில் உடனிருக்கும் வரமாய் நானிருக்கும் தவம் கொடு...தாய்மை மேன்மையே...!!!!!!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி..பரமே.!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..