Sunday, 11 January 2015

விரத பெண்மை

பின் கழுத்து
முத்தமிட்டு

பின்னிருந்து
தொட்டு தொடரும்

இரவுக் குறும்புகளோடு
பகலிலும்
கனவு வருவாய் என்றே

சீவி சிங்காரித்து

விழித்த தூக்கத்தை
விழி மூடி அழைத்து

தனிமை தவமிருக்கு தலைவா

மையல் கொதியலாய்
தாளாது தளும்பும்
என் விரத பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..