கனியமுதே
கட்டிக்கரும்பே
காவியத் தமிழே
மலர் தேன் சுவையே
மதுப்பூ மணமே
கையெடுத்து நெஞ்சமர்த்தி
கொஞ்ச கொஞ்ச
இன்னும் இன்னும்
இறைஆயுள் வேண்டும் வரமே
வேரோடு புதுபிக்கும்
பேரனெனும் பேரின்பமே
எட்டநின்று
கிட்ட பார்த்து
பெருமிதம் விம்முகிறேனடா
முதுமை பழுக்கும்
பருவவாசனை கனிக்காட்டில்
உன்னுடன் நானும்
இன்று
கிழவனாய் பிறந்து
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..