நட்பெனும் தோழமையாய் வந்து
உதிர உறவாடும் அன்பு சகோதரருக்கு Mohamed Ubaidulla
இனிய மண நாள் வாழ்த்துக்கள்
தீரா தாய்மொழிபற்று
திகட்டா தமிழ் மொழி ஆர்வம்
எம்மதமும் சம்மதம் எனும்
சமத்துவ மனப் பாங்கு
எப்போதும் உற்சாகம் அணைக்கும்
நொடித்துடிப்பு ..
எழுச்சிமிகு இளைஞராய்...மதுரை மன்னராய்
வலம் வரும் உதிர சொந்தமே
நீர்
மீன் கொடி பறக்க
மதுரை ஆண்ட பாண்டிய வழி வம்சமா
இல்லை...சொர்க்கவிலாசம் ஆண்ட
திருமலைநாயக்கர் வழி வாழையா
யார் நீர்...என்றே வியக்க வைக்கும்
எவரையும் நேர் நிமிராய் நேசிக்கும் உன் செருக்கு
மன்னர்களுக்கே உரிய
மகத்தான பண்பின் பிறப்பிடம்
தோழமைகளுக்கென ஓரடி ஈரடி
வான் தொட்டு வளைந்து வளரும் வானவில் வசந்தம்
கலைகளின் ஆனந்த ரசிகர்
எல்லோரையும் பாராட்டும் பரந்த மனத்தோழன்
பழகும் நட்புகளுக்கே இப்படியெனில்
கைபிடித்து கருத்திணைந்து வசந்தமாடி திருமகளாய் உடன் உறையும் உயிர் சொந்தங்களுக்கு கேட்கவா வேண்டும்
குழந்தையென குதுகலமாய் ....அன்பாடும்
உமது அமைதி நிம்மதி அரவணைப்பு சிரிப்பில்
தெரிகிறது....அண்ணியார் தாயென ....மனதோடு உம்மை கண்களில் தாங்கும் மங்கையர்கரசி அழகு
அன்றில் பறவைகளாய் ..ஒத்த மனம் கொண்டு
ஆழ்கடல் நேசிப்புடன் ..உயிர் பாதிமீதியாய்
உறவிணைந்த உத்தம பிரியங்களே
இன்று போல் என்றும் ...என்றென்றும்
பொங்கும் இன்பம் தங்கும் வளமையுடன்
ஆனந்த பூச்சூடி...ஆசைப் பெருவாழ்வு வாழ
ஏகாந்த பெருவழியின் நிம்மதி வழிகள் அனைத்தும்
உம் இருவருக்கும் உல்லாசமாய் சாமரம் வீச....
மணக்கும் மதுரை மல்லி சர மாலை கொண்டு
இருவரையும் மாற்ற வைத்து..மனக் கண் கண்டு ரசித்து
எல்லாம் வல்ல அல்லாவையும்..நான் வணங்கும்
என் அன்னையும் வேண்டி வாழ்த்துகிறேன்...
இனிய மணநாள் வாழ்த்துக்கள் சகோதரரே...
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..