சாரை எறும்பு கூட்டமே
சற்று விலகிச் செல்
கொஞ்சும்காதல் கிளிகளே
கொஞ்சம் மவுனம் கொள்..
மெல்லின தென்றலே
வேக தாபம் குறை
குளிரணைக்கும் மார்கழியே
கூதல் கழுவு
இதழ் விரியும் மலர்களே
நிசப்தமாய் நாசி நிறை
சுத்தும் பூமி சூழ்
கத்தும் கடலே
ஆவேச அலைமகளை
சுருட்டி உள் இழுத்தணைத்து
அமைதி படுத்து...
செல்ல மயில்
துயில்கிறாள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..