Thursday 13 November 2014

நதிகள் இணைப்பு



தாகம்..தாகம்....தாகம்
ஒருகுவளை தண்ணீர் இல்லாமல் ஒடிந்த விழுகிறது மனித இனம் ....

குடங்களை வரிசையடுக்கி வீதியெங்கும் போராட்டம்

வெடித்தபாளமாய் பாசபசையற்ற வயல்வெளி

விளையாத வயலுக்கு... பணம் கொட்டி கொடுத்ததால் விளைநிலம் எங்கும் இன்று அடுக்குமாடி

மரம் இழந்த கடுகளால்...மழை பொய்த்து நிலத்தடி நீர் வறள

ஆண்டுக்கொரு முறை..வேதனை கூட்டி விழுகிறது..விவசாய தற்கொலை

வானம் பொய்த்தாலும்..வருசமழை தப்பாமல் புயல் கூட்டி பெருந்தீனியாய் பொங்கி

பூமிச் சோழியை சுழட்டிப் போட்டு நதியென நடனமிட்டு...கடல் சேர்கிறது

ஒரே நாளில் பொங்கிப் பொழியும் வான் பிரியம்

ஆங்காங்கே..அணிதிரளும் நதிகளை ஓரிணைத்து ஒருங்கிணைத்தால்

ஆயுள் முழுதும்....

வறண்ட கோடையிலும் கொடை பெற்று வசந்தமாய் வாழும் நம் பூமி
சீவிச்சிங்காரித்து பச்சைப் பட்டுடுத்தி ஆறுமாதம் ஒருமுறை..கழனியெங்கும் கர்ப்பம் தரித்து

பிரசவமெடுப்பாள்..கதிர்பிள்ளை பெற்று என் நிலமகள்

தண்ணீர் பாட்டில் விலை கொடுத்து வாங்கும் அவல நிலை மீள....

பசியால் பரலோகம் போகும் என் மானிடன் மாண்புற

கண் ருசிக்கும் விருந்தாய்..என் பாரத தாய் பசுமைப் போர்த்தி சிலுசிலுக்க

மாநிலமெங்கும்..அண்டை நாட்டுச் சண்டைபோல் சேறுகலந்திருக்கும்....நீர்ச் சண்டைகள் ஓய

ஆளும் சுதந்திர சாம்ராஜ்யங்களே...

ஓடும் நதிகளை ஒன்றிணைத்து

மழைக்கால நீர் சேமித்து நம் அவனி சிறக்க ஆனந்தமுடிவு எடுப்பீரோ....

வாழும் மானிட கூட்டங்களே..தாகமின்றி நாம் வாழ ஓங்கி குரல் கொடுத்து

ஓர் அணி திரள வாரீர்.........வாரீர்

வாழ்க ஜனநாயகம்..ஜெய்ஹிந்த்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..