கெம்புக்கல் அட்டிகை
கொத்து முத்து ஜிமிக்கி
தீட்டிய இதழ்...
திருத்திய விழி
வெள்ளைகல் மூக்குத்தி
நெருக்கமல்லிச் சரம்
பருத்திபஞ்சு கன்னம்
விடைத்த புறச்செவி
எல்லாவற்றையும்
புறந்தள்ளி ....புருவ நங்கூரம்
போடுகிறதடி
கரையோரம் ஒதுங்கி
காவியம் வரையும்
பாவையுன்
ஓவியப் பார்வை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..