Thursday, 8 January 2015

அமுதவிஷமடி நீ

அடுக்குகள் பல
தடுக்கி சமைத்த

தளிர் மேனியை...
வளைத்து நெளித்து

நரம்போடும்
உணர்விலைகளை
மெல்ல உசுப்பேற்றி

நத்தைகால் நடந்து
என் ஈரப்பதம் தேடி வரும்
மின்னல் தாடைக்காலியே

தீண்டி என்னை
திகட்டி ..ஆயுள் நீடிக்கும்
கொடுக்கழகு

அமுதவிஷமடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..