Saturday 29 August 2015

தமையன் எனும் பேரன்பாகும்



தாயென்று தந்தையென்று
தமையன் எனும் பேரன்பாகும்... இரா. குமார்

தன்னிகரில்லா பெருமைநிமிர் திமிரே

தரணிவெல்ல தனிஅவதாரம் எடுத்த
தாமிரச் சுடரொளியே

தாழம்பூ பிரியங்கள் கொஞ்ச

கனிமனக் கனிவும்
குழைமன குவிவும் கொண்டு
கண்காணும் உயிரணைத்தும்
குறையில்லா நிமிர்வே என

வேற்று மனங்களிலும்
வேற்றுமை காணாது

புகழ்தோள்சேர..புன்னகை செய்து
பதவி நாற்காலியிட பணிவு காட்டி

செய் உதவியை ...
இடக்கையறியாமல்
வலக்கை கொடுத்து

நன்றியெனச்சொல்லி...நன்கை மறப்போர்
மறுமுறை அணுக.....மாற்றுமுகம் காட்டாது
மனதார கரம் நீட்டி

கேட்டோர்க்கு இல்லையெனாமல்
கேட்கும் முன் தேவைபுரிந்து
உதவிடும் உன்மனக் கணிப்பில்

வள்ளல் கர்ணனும் ....வாகையாய் தோற்கிறான்
உம்மைத்தோளணைத்து

நட்புக்கு இரங்கும் நடப்பு நீர்
பணங்களைவிட..மனங்களை சம்பாதிப்பதிலேயே
ஆயுள்நிம்மதி தேடும் ஆழ்நிறை அண்ணலே

சிரிக்கும் முகங்கண்டு சிந்தையெழும்
சீர்வளமை மொழியே

தாய்மொழிப் பெருமையின்
மீசைதிமிர் அடையாளமே

குமார் எனும் வளர்நிறைப் பெயரை
வர்த்தகக்குறியீடாய் மாற்றி இன்று

சிகரமெழுந்து நிற்கும்....சூழ்புகழ் சுயம்புவே

கடை மகளாய் பிறந்து
கவின் செல்லம் கொஞ்சி
உடன்பிறந்தோன் ....சிறகில்...அடைகாத்து
உயிரென வளர்ந்த என்னை

வளர்பருவம் ...வந்தணைத்த இடைவெளியில்
எதுவென்று எவரென்று அறிமுகமில்லா
அடையாளத்தில்...நானும் இங்கே..

இன்னொரு அண்ணனே என்றெனக்காகி
தாய்மொழியை தொப்புள் கொடியாக்கி
விரல்தந்து சிறுமொழி யை .....
வழிநடத்தும் ஆசானே

என்னின் ப்ரியத்திமிர் பிரமாண்டமே

என் வருத்தம் தனதாக்கி..என் விழி கலங்கும் முன்
மனம்கலங்கி மறுதீர்வு தந்து
மாற்றுவழிகாட்டி...
விரல்வழி......
வழிநடத்தும் வேந்தே வேள்வியே

எப்படி நான் உம்மை விட்டுக் கொடுப்பேன்
எவர் முன்னும்...ஆதலாலே
உறுதிமொழிகிறேன்

உம்மை மதிக்காதவர்,,,,உமக்கு தோழமையெனினும்
எனக்கு எதிரியே

நீர் மன்னித்தாலும்...நான் கனலே வீசுவேன்

சில பாசங்களும் ..பவித்திரங்களும்
இன்னதென்று உறவறியாதவை
யோசிப்பு சிக்காதவை.....

அரைநாள்குரல் கேட்கவில்லையெனினும்
ஆயுள் ஆண்டு ஒன்று குறைந்ததோ எனும் துடிக்கும்
நம்மின் ...இப்பிரியத்திற்க்கு...இன்னதென்று
உரைஎழுத......

சொல்லும்..எழுத்தும்

இனிதான் அவனிஎழும்ப வேண்டும்..மொழியாய்

விடையில்லா பாசத்தை விழியணைக்கும்
தமக்கை சொந்தமாய்....

தஞ்சையாண்ட..ராஜ ராஜன்..குந்தவை
ராஜ பிரியமாய் ...

நினைவு செதுக்கி
நிம்மதியாடுகிறேன் எப்போதும்

அகில்நிறைஒளியே
ஆதவ வழி சுடரே

எழுத எழுத எழுத்துக்கள்தளும்பி வழியும்
தனித்துவ தாய்மொழியே

வாழ்த்த வயதின்றி வணங்கி நிமிர்கிரேன்

என்பெருமைநிமிர் திமிரை

ஆயுள்கோடி கொடுத்து...அன்னை உம் பக்கம் நிற்க
ஆனந்தவிழி கசிய ....

அன்புக்கவிபுனைந்து....உயிரேந்துகிறேன்
அண்ணன் உம்மைப் புகழ்போற்றி போற்றியென

ஆசீர்வதியுங்கள்..
இனிய வணக்கங்கள் ஆசானே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..