Sunday, 30 August 2015

வலைச் சரம் எனும் வலைப் பதிவு...ஆசிரியராய் .நான்

அறிமுக பதிவாய் வலைச்சரத்தில் நான்

சுந்தரி கதிர் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்
ஒரு அறிமுக பதிவு

***************************************************************************************************************************வலைச் சரம் எனும் வலைப் பதிவு(Blog)...வாரம் ஒரு வலைப்பதிவாளரை ....ஆசிரியராய்.....அமர்த்தி
சிம்மாசனமிட.....

இந்த வாரத்திற்கு .....நான்


இணையம் வழி இதயம் பகிரும் அன்புத் தோழமைகளில் ....சுய அறிமுகமாய்....·


என் எழுத்து பற்றி...என் பேனா ..பெருமித..கவி சொல்கிறது..

நாளை முதல் நானறிந்த மொழியாளர்கள் பற்றி..
என் விழிப் பார்வை

வரும் வாரம் முழுவதும்..உடன் கைகோர்த்து...
வந்தமர்ந்து வாசித்து வாகை கருத்திடுங்கள் ...

கவின் தோழமைகளே

***************************************************************************************************************************************************************************************வலைச்சரத்தில் இனிய இரண்டாம் நாளாய்....ஆசிரிய அரும்பணியில் முதல் நாளாய்......

முக்கனி தேன்சுவை நிறை மூன்று தமிழை.....

என் விழி மொழி பார்வை வழி..நான் பருகிய தமிழமுதை ....சமைத்துள்ளேன்


முதலாய் ..குரு வணக்கமாய் ...என் ஆசான் இரா. குமார்அவர்களின் 
வலைப்பூ.....


தமிழ் தேன் சுவை தேன்..இரண்டாவதாய்......

என் நிழலின் நிகழ்மொழிஎன்னின் அதிமுக்கியமானவள் மீராவின் Meera Blossom  வலைப்பூ....எண்ணத்தூரிகைமூன்றாவதாய்..முத்தாய்ப் பூ

வலைஉலகின் புதிய அறிமுகமாய்...

வாகை தமிழின் தனி அடையாளமாய்.....

சட்டம் கற்று சாட்டையடி பதிவிடும்...சட்டமன்ற உறுப்பினராய்...வீறு நடை போட்ட...தென்னக சிங்கம் Bala Chander

வை பாலசந்தர் சார் அவர்களின் வலைப்பூ

அமுதனெ அள்ளி பருகி..அறிந்து தெளிந்ததை..
அரும்பென மொழியிட்டுள்ளேன்....

வாசித்து வசித்து
தாய்மொழி நேசியுங்கள் நட்பூக்களே

************************************************************************************************************************


வலைச்சரத்தில் . மூன்றாம் நாளின் ....இரண்டாம் பூக்கள்

முதலாய் நான் சரமெடுத்து தொடுப்பது அன்புத் தம்பியின் மஹா சுமன்

எண்ணங்கள் பல வண்ணங்கள்
ஆழ் மொழி சிந்தனையாளர்

இலக்கியத் தேர் வடம்பிடிக்கும் இளவல்

மண் அணைக்கும் மழை போல் ....தாய்மொழி காணுமிடமெல்லாம்...இமையணைத்து ஈரப்பிரியம் காட்டும் ...இன்முக விமர்ச்சகர்

தொடுத்துள்ளேன்...அவர்தம் தூரிகை உதிர்வுகள் சில வற்றை..சீர்பெருமை அடையாளமாய்..வாசித்து வாழ்த்துங்கள்

அடுத்து ...முகநூல் பட்டாம்பூச்சியின் Gayathri Devi
என்னில் உணர்ந்தவை


அம்மிணி தமிழ்மணத்தின் இளவரசி

பக்குவ குழந்தை..பச்சிளங்குமரி .என்றே பதிவுகள் சொல்ல...

நான் காயு பேசுறேன் னு அசால்டா அனைவரிலும் ஏறி மொழி சிம்மாசனமிடுவார்

ஓடும் என் நிமிடங்கள்
இளைப்பாறி இன் அமுது பருகி பதியம் பாட

வலைச்சரத்திற்கு என்னை விரல்பிடித்து இழுத்தழைத்து
ஆசிரிய ஆசானம் தந்த தங்கை

நன்றி நவின்று உன் நன் பூ தொடுக்கிறேன் பிள்ளாய்

மூன்றாவதாய்....

சட்ட வல்லுனரின் பலர் அறியா இலக்கிய தாகம்

Kathiravan தங்க.கதிரவன்
தங்க கதிரவன் சார் வலைப்பூ


கதிர்அவன் கவிதைகள்
சங்க இலக்கியத்தை சட்டாமாய் கையாளுவது இவரின் அசாத்திய திறமை

பத்து பாட்டு ...எட்டுத் தொகை எடுத்து இவர் எழுதும் மொழி வளமையே இதன் சாட்சி

போர்களப்பூ ஒன்று பதியனிட்டிருப்பார்..வீரமறக்காதல் சொல்லி....

வாசிப்போர் சென்று கண்டு வருவர் கலிங்கத்துபரணி காட்சி

மு஁ம் முன்றாய் எடுத்து மணம் தொடுக்கும் எம் விழிமலர் மாலை..சென்றணைத்து பிரியக்கருத்திடுங்கள்

பிரிய தோழமைகளே
****************************************************************************************************************


நான்காம் நாள் வலைச்சரத்தில்.....
நான் விழி தொடுத்து
வாகை சூடும் நட்பூக்கள்...

கவியணைத்து கனிவு மொழி செப்பிடும்....
திருமதி காயத்ரி வைத்தியநாதனின்....


தூரிகைச் சாரல் .....

இயல்பியலை இனிப்பு மொழியெடுத்து சொல்லி
கள வெற்றி கண்ட

ராசியான கைகளில் தவழும் ஜ்வல்யாவின் தந்தை செப்பேடான ரிஷபன் ... Rishaban Srinivasan


கனவுகளை பிரியமாக்கி தன்னின் பெயருமாக்கி

தேடல்களை சுவாசிக்கும்
தூத்துகுடி முத்தின்கனவுப் பிரியன்


சொத்தான செந்தமிழ் சிலேடை

சன்னிதி பூக்கள் எடுத்து சரம் தொடுத்துள்ளேன் தோழமைகளே

வாசித்து வணங்குங்கள்

தமிழன்னை வசம் செய்யும் வாச உறைவிடங்களை..!!!!****************************************************************************************************************ஐந்தாம்நாளாய் இமைதிறக்கும் வலைச்சரத்தில்
இன்று அலங்கரிக்கும் நந்தவனப் பூக்கள்

தமிழ்குடிலின் நிர்வாகி ...தமிழ்காதலனாய்
செம்மொழி நேசிச்சு கொஞ்சும்
தீக் கனல்....தன் எண்ண உணர்வுகளை
உதிரச்சாரலாய் தூவும்..... இதயச்சாரல்


வற்றாநதியாய் ஓடி தன் எழுத்துக்கடல் தேடும்
கார்த்திக் புகழேந்தி


டார்வின் படிக்காத குருவியாய் புத்தகமிட்டு
குரலிசையாய் கூவும் வானொலி குயில்
உமா மோகனின் ...குரல்


யதார்த்த வாழ்வியல் ஓட்டங்களை கட்டுரைகளாக்கி
சங்கம் வளர் தமிழின் சங்கம பிரியங்கள் போற்றி
இதழில் எழுதிய கவிதை தொகுப்பில்...இன்தமிழ்
சொல்லும் Sathish Sangkavi யின் சங்கவிவாசித்து நேசித்து மணம் போற்றுங்கள் தோழமைகளே********************************************************************************************************************


ஆற்று நீரோடும் ஆறாம்நாளாய் வலைச்சரத்தில் ...இன்று நான் தொடுத்து மணம்பரப்பும் சீதனப் பூக்கள்....

திரு மண பெண்மை பூக்கள்......

கொடிபிச்சி பூவாய் அய்யம்பாளையும் மலர்ந்த
அகல் முக அனல் பூ Sakthi Jothiகளம் பல கண்டு மொழிவெற்றி சூடி முகிழ்ந்து மணம் வீசிய போதும்
கர்வத்திமிர் இல்லாத இயல்பு நட்பூ """ஜோ""

அழகுமுக வதன ஆர் ஜே பூ Sumitha Ramesh


எழுத்தணைத்து எல்லாமும் சொல்லி..
இறையணைத்து அமர வைக்க ஆழ்வார்கள் மொழி வழி செப்பும் அழகு ..
அபுதாபி பூ..சுமி

இனிய கவிதையாய் தேடல் பிரியங்கள் ஏந்தி

இன்மொழி வாளெடுத்து
வன் கொடுமைகள் சாடும் பூ

அயல்நாடு வசிக்கும் கீதஅன்பூ கீதா பூ....
Geetha Ravi


ஈழத்துமண் வித்து விழித்து
அசாத்திய நடையில் அவலம் சாடி....வளையும் தமிழை..வளைவு சுழிவாய் கையாண்டு.. ..மணக்கும் பூ

சுவிஸ் வசிக்கும் சுகந்த பூ
குழந்தைநிலா ஹேமா


மணமானபின் தன் இறகு மணம் பரப்பி வான் வெற்றி கண்ட தேன்சிட்டு சீதனப் பூக்களை வாழ்த்தி மொழி வரவேற்போம் தோழமைகளே

*****************************************************************************************************************சுபமங்களாய்...இன்றோடு நிறைவுபெரும் ...வலைச்சரத்தில் வாசனைப்பூக்கள் தொடுக்கும்
ஆசிரிய அரும்பெரும் பணியில்

இன்று நான் அரும்பெடுக்கும் ஆதர்ச பூக்கள்


அயல் தமிழ் வசிக்கும் ஆடல் பூ Natarajan Somasundaram

பொள்ளாச்சி இலக்கிய வட்ட பூபாள பூ இரா. பூபாலன்

மதுரைதமிழ் மணக்கும் பழனி Palani Kumar


சொல்மொழி வளமையாடும் சொல்வல்லோர் பக்கம் சென்று தமிழ் மொழி ருசியாடுங்கள் தோழமைகளேஅமர நேரமில்லாமல்...அலுவல்கள் இமையணைக்க இளைப்பாற அவ்வப்போது கிடைக்கும் நிமிடத்தில் ஒளிப்படம் ஒன்றெடுத்து மொழி துள்ளி

ஓய்வெடுக்கும் என் எழுத்துக்களை,..பொன் பொக்கிஷமாய் சேமித்து

சுந்தரக் கவிதைகள்  
என்றொரு பெயரிட்டு
நித்தம் பொருள் சேர்த்து

ஆரம்பிப்போம் ஒரு வலைப்பூ பக்கம் என்று
அதனை சுந்தர நேசங்கள்

என்று இணையம் சேர்த்து ....

இன்றென் வலைச்சர சிம்மாசனம் அமர்த்தி சாமரம் வீசும்

என்னின் நிழலுக்கு ..என்னே நான் நன்றியுரைக்க

கடும் கோபத்தையும் கொடும் மொழிகளையும்..உரிமைபாசம் என்றே என் நேசத்தை சரியாய் புரிந்து ..விலகிப்போ என்று பல முறை நான்
பந்தாடிய போதும்..எங்கு போவேன் உன்னை விட்டு
என தாய் அடித்த போதும் அணைத்து கட்டியழும் குழந்தையாய்,.,,என்னை நெகிழ வைக்கும்
இவளின் இப் பிரியத்திற்கு என்மொழி நான் பதியமிடுவேன்

குறையாயிரம் மிருந்தாலும்..பொறுமையேந்தும்
நிலதாய்மனமாய்....

இவளை நான் இமையணக்க என்றும் எனக்கு வரம் வேண்டுமென்றே ..தவமிருக்கிறேன்
இப்போதெல்லாம் அன்னையிடம்

என்னின் வெற்றியிலும் புகழிலும் ..என்றும் நீ
எழுந்திருப்பாய்..என்னை விட பிரமாண்டமாய்

என் நேச நிழலே Meera Blossom

சிம்மாசனமிட்டு சீர் பெருமை செய்த வலைச்சரத்திற்கு


சுந்தர நேசங்கள்..என்றும் சொல்லும் சில்லினிமை நன்றிகள்

********************************************************************************************************************


வண்ணமலர் சரம் தொடுக்க சொல்லி வலைப்பூக்கள்
எடுத்து முன் வைத்து ..

தமிழ்மணம் ஆசனமிட்டு சாசனமிட அழைக்க....


இளைப்பாற மொழி மடி அமர்ந்து..இடைவிடாத பணியோடி பகலிரவு விழித்த விழி இமையணைக்கும் எனக்கு..முடியுமா என்றே அச்சம் மேலிட

தோழி மீரா நம்பிக்கையிட.....தொடர ஆரம்பித்தேன்
முகநூல் கவிதையணைக்க கொஞ்சம் கழல

தினம் மூவர்...நால்வர் என்று ...மும்மூன்று பதிவர்கள் தேடி படித்து விழிப்பார்வை விமர்ச்சனமிட

என் நாளின் மூன்று மணி நேரங்களை அமைதியாக
ஆட்கொண்டபோதும்....தித்திக்க திகட்டி உண்டு மரித்தேன்...என் மொழி மடியில்

இது ஓர் பெரும் சுவாச தேடலாய் அமைந்தது எனக்கு

நேரமில்லாமல்..தவறவிட்ட பதிவுகளை..
பலரின் பக்கம் சென்று வாசித்து இன்பம் பெற
அமரஆயுள் தேன் துளி தந்தாள் என் அன்னைத்தமிழ்

புதுவித தேடல் அனுபவமாய் அமைந்த இவ் ஆசிரிய பணி....அறிந்ததும் தெறிந்ததும்...நெகிழ்ந்து நான் நேசிக்கும் என் தாய்மொழி...

எடுப்போர் எடுக்க கொஞ்சி வளைஞ்சு நெளியும் பிள்ளையாய்
எப்படி இப்படி புதுச்சொல் ஆயிரம் கொட்டி ஆனந்தமாடுகிறாள் என்றே

உருகி தொழுது உயிர் வணங்குகிறேன்
உன்னதமொழியே

பிறக்கும் பிறவிதோறும் ..உன் மடிப்பிள்ளையாகவே என்றும் நான் தவழ வரம் வேண்டும்

இப்பணியில் என் இன் மொழி இமைதிறக்க
அமிர்த மொழியெடுத்த தோழமைகளின்
ஆனந்த வலைபூக்களே காரணம்

அவர்களுக்கும் அன்பின் நன்றிகள் சொல்லி

அரும் பூ தொடுக்க ...அரும் பணி தந்த
அவைக்கழைத்த தமிழ் மணம்...
தரணிஎங்கும்
தன் மணம்வீசி திகழட்டும் எட்டுத்திக்கும்

வாசித்து கருத்திட்டு வளமை ஊக்குவித்த
தமிழ் ரசிகர்களே...
தமிழ் மணத்தின் மிகப் பெரும் பலம்
அஃதில் நானும் ஒருத்தி என்பதில்
என்றும் ஆயுள் பெருமிதம் !!!!!1 comment:

  1. மீண்டும் ஆசிரியராக வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..