Friday 21 August 2015

நீள்பெரும்தவமே

பொன்னென்று கொஞ்சவா
பொன்கழஞ்சென்று மிஞ்சவா

மழையென்று சொல்லவா
மகிழ்நிறை என்று போற்றவா

அன்பென்று அணைக்கவா
ஆதுரமென்று முகிழவா

வாழ்வென்று தவிக்கவா
வரமென்று நிறைக்கவா

முகமென்று கைஎன்று
கனி வாய் இதழுமிழ் ருசிக்கவா
பிள்ளைமொழி ரசிக்கவா

போக்கிரிஎன்று பெருமிதிக்கவா
பொற்சுடரே என்று ஆராதிக்கவா

மனமெங்கும் ஆனந்தமாட
மடியிட்டு தாலாட்டவா

சின்னதொரு சிரிப்பை..சிந்திவிட்டாயடி
சித்திரப் பேரன்பே...
என்னெற்று நான் மொழியெடுத்து கோர்க்க

முத்தும் பவளமும் முத்தாரமிட்டு
முத்தமிடும் பேரழகு உன்னை

அத்தை மடி மெத்தையென அன்றொரு
கவி பாட.........அவன் சொல் தூளியிட்டு
ஆராரிரோ மொழிதொட்டு...தாலாட்டுகிறேன்

அன்னையடி நீ எனக்கு
அன்னமடி நீ எனக்கு

நிம்மதியடி...நீ எனக்கு...நீள்பெரும்தவமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..