Saturday 22 August 2015

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

கடைகோடி இந்தியாவின்
கடல்மாநகரம் பிறந்து

கடையேழுவள்ளல் வழியில்
கலாம் எனும் பெயர் தாங்கி

கனவு காணுங்கள் என்று
கை தட்டி மார்நிமிர்த்தி

அணு அடையாள நிமிர்திமிராய்
அறிவியலின் அணுபிழம்பாய்

உலகெழுந்து நிறைந்தது
உயர் தமிழனின் வீர அடையாளம்

மானம் காத்தாய்..மண் காத்தாய்
எள்ளிநகையாடும் எதிரியவன்
சிந்தை சுருங்க வைத்து
ஏவுகணை நாயகன் ஆனாய்

விமர்ச்சன களைகளை
வீர சகாசங்களால் வேரறுத்து
விருதுகள் கொஞ்சும் வெற்றி வாளானாய்

விலைபோகவில்லை
அடமானம் வைக்கவில்லை
ஆதலால் நீ,,,,,அணு மணம் பெற்றாய்

தனித்து நின்றாய்
தன்மானமாய் நின்றாய்
தமிழனாய் நின்றாய்...இன்றோ
தரணி வென்றாய்

அக்னி சிறகென்று...
வேள்வி சரிதை எழுதினாய்
வெகுண்டெழுங்கள் என்று
தோள் தட்டி கரம் கொடுத்தாய்

முதல் குடிமகனாய்...நாடு உனக்கு
மகுடம் சூட்டி அழகு பார்த்தபோதும்

என்றும் நான் ஆசிரியனே என்றே
ஆச்சிரியப் படவைத்தாய்

பொன்மொழிகள் தந்து
மண்ணாளும் சூத்திர சாத்திரம் வகுத்தாய்

வாழும் விவேகானந்தனாய்
அறிவுத்துறவறம் கண்டு
அகிலமெங்கும் வேர்பரவி
விழுது விதையூன்ற அறிவு பொழிவுகள் தந்தாய்

கவிதைகளின் பிரியனாய்
கர்நாடக இசை ரசிகனாய்

குழந்தைகளின் நேசனாய்
குற்றங்களின் மன்னிப்பாளனாய்
குடியரசு வென்ற மாண்பு மிகு...மண் நிறையே

கண்நிறை வழிந்து உருக
கடலளவு கன மனம் தந்து.....கையாட்டி செல்லும்
கலாம் எனும் சாதனை சவாலே

விஞ்ஞான வெற்றி அடையாளமே
வீர வணக்கம் ...

வந்த பிறவியை...வாழும் பிறவியாய்
நிறுத்தி நிலைநாட்டி ..இன்று..ஆத்ம விடுதலையாகும்

அணு அனல் எரிமலையே

வீர வணக்கம்.............ஜெய் ஹிந்த்

1 comment:

  1. அருமை சகோ கலாமை உயர்த்திய பொக்கிஷ வார்த்தைகளால் பாமாலை சூடிவிட்டீர்கள் அவர் வழி நடப்போம் ஜெய்ஹிந்த்....

    சகோ நேரமிருப்பின் எனது கடந்த வார பதிவு ''அக்னிப்பறவை'' படிக்கவும் நன்றி

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..