Saturday 29 August 2015

பச்சப்புள்ளையென

மனிதர்களை புரிவதில்
மாறுகண் உடையவள் நீ

விக்கி திக்கி
திணறிய போது
திசையும் காட்டினேன்

வாசல்தட்டிய பிரியங்களை
வரவேற்கத்தெரியாமல்

வந்தமர்ந்த சொந்தங்களை
ஆராதிக்க புரியாமல்

அலங்கார குலுங்களில்
ஆதர்ச வேசத்தில்
வண்ணம்தீட்டிய பொய்களில்
வார்த்தைபுரட்டி வாயாடி

ஏளனத் திமிராய்
ஏற்றிய ஏணி
தவறவிட்டு

தவிப்பாய்
மொழிக் கொக்கியிடுகிறாய்

எப்போதும் பழிபோட
எதிராய் எவராவது உனக்கு
அமர்ந்து விடுவார்கள்

இம்முறை நான்

குயவன் கை மண்பாண்டமாய்
கூத்தாடி உடைத்து விட்டு
ஊர் ஒப்பாரி வைப்பதால்
உடைந்தது ஒட்டிவிடுமா

ஓடி ஓடி மறைத்தாலும்
ஓங்கிய ஆதவவிழி ஒளி தான்
மறைக்க முடியுமா

கோபங்களை விட
கொழுந்தெழுகிரது...

நானாகி நேசித்த பிரியம்....
நெம்புகிறது

பாவம் நீ இன்னும்
பச்சப்புள்ளையென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..