Friday, 5 December 2014

கார்த்திகை தீபத் திருநாள்



தீப ஒளி பெருநாள்

அடிமுடி அறியா சிவனை ...
பிரம்மனும் விஷ்ணுவும் ..அருள் தேட
அக்னிமலையாய் ஈசனவன்..கண்னொளி திறக்க....


கார்மேகம் சோணைமழை பொழியும்..பெளர்ணமி மாதமாம்
விண்மீன்கூட்டம் கீழ்வானில் சேகரமாகி ஒளிவிடும் திருக்கார்த்திகை மாதம்

முதல்நாள்தொட்டு மாடவிளக்கிட்டு
முழுமதிவரும்நாள்
முருகனவன் பிறந்த கார்த்திகை நட்சத்திர திருநாளில்....
அனல் மலையில் பெருஞ்சோதியாய் அப்பனவன் எழுந்தருள....
வீடெங்கும் வீதியெங்கும் ஆலயம்தோறும்...சர்வாலயதீபமாய்..அகல் விளக்கிட்டு...
மன இருள்விலக்கி ..இறை அழைக்க...

நடுவாழை...சுற்றி தென்னை..பனை காய்ந்தஓலை கட்டி ..கோவில் வாசல்களில்..சொக்கப்பானை கொளுத்த...
வெடித்து எரிந்தகுச்சி எடுத்து வந்து
வயல்வெளிநட்டு மகசூல் பெருகுமெனும் ஐதீகம் தொடர....

சிவசிவா சிவசிவா...நாபிக்கமலம் அனல்தகிக்க
அரோகரா கோஷமிட்டு குமராலய தீபமும்..
ஓம் நமோநாராயணா நாதமிட்டு விஷ்ணுவாலயதீபமும்...ஒளிச்சுடரற்றி....

சைவமும் வைணவமும்...மனிதம் அறம்பெறவே..என அன்பாய் உணர்த்த....

அவல்பொரி..அப்பம்..கொழுக்கட்டை...
பொரிவிளங்காஉருணைடையோடு...இனித்து மகிழ்ந்து ..

இனிய வாழ்வை....மானுடம் செழிக்க ....ஒளியேற்றி மகிழ்வோம்...

எங்கள் வீட்டு ஒளிச்சுடருடன்
இனிய வாழ்த்துக்கள் தோழமைகளே!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..