Friday 19 December 2014

அண்ணண் தங்கை உறவு...


This is dedicated 2 my one..only own brother "RAMESH"
ANNA..''miss my golden days wth u anna''

தாயும் தந்தையுமாகி
அன்பாய் அரவணைத்து
எனக்கு வாழ்க்கை கல்வி
கற்றுத்தந்த ஆசான்
நீ..அண்ணா......

எதற்காகவும் எனை
அழவிட்டதில்லை நீ

தேவதை சிறகு பொருத்திஅரண்மனை வாசம் தந்து அழகு செய்தாய் என்னை

தலையில் கொட்டி சிணுங்கவைத்து........
தப்பு செய்யும் போது
கோபமாய் கை உயர்த்தி மிரட்டி.......
சிறிது நேரம் கழித்து
எதுவும் நடவாதது போல் அருகில் வந்து இயல்பாய் பேசி சிரித்து....
எனக்கு பிடித்தவகளை
நான் கேட்காமலேயே.....
எதிர்பாரா தருணத்தில்
எல்லையில்லாமல் வாங்கி
தந்து உன் கருணையால்
கண்களை குளமாக்குவாய்
அடிக்கடி.........

நீ பார்த்த மணமகனை
நான் பார்க்காமலே
திருமணம் செய்தேன்
உன் முக திருப்தி பார்த்து நான்

கைபிடித்து கொடுக்கையில்
தாயின் கவலை நிம்மதி
கண்டேன் உன் கண்ணில்.....

எங்கள் அதிர்ஷ்ட தேவதை
செல்கிறாள் எனக்
வாய்விட்டு கலங்கினாய் நீ

மகிழ்ச்சியாய் கூட
தனியே வீடு வராதே என
ஆயிரம் அறிவுரைகள் தந்து...

எதுவேண்டுமெனிலும்
என்னிடம் கேள்......
கணவனை கஷ்டப்படுத்தாதே
எனக்கூறி..சின்ன சின்ன கருத்துவேறுபாடுகளால் கூட
என்மீது சோகநிழல் படியாது காத்தயே..........அண்ணா....

என்னிடம் கேட்காமல்
எதுவும் செய்ததில்லை நீ.....
உன் முதல் தோழி தாய்
கடைசி தோழி நான்

அருகில் அமர்ந்து
உனக்கு
உணவு பரிமாறி ..நாம் பேசும் கதைகளில் பசியாறும் நம் உறவு..........

ஒருபோதும் ..எவரிடமும்...
எனை விட்டுக் கொடுக்காது உன் அன்பு

இன்று என் குழந்தை என் கைபிடித்து நடந்த போதும்......

நான் உன் கைபிடித்து தான்
நடக்கிறேன் தடுமாறும் போதெல்லாம்....

8 வருடங்கள் எனை விட நீ
மூத்திருந்தாலும்....
இதுவரை நான் உன்னை அண்ணா என்று அழைத்ததில்லை...........
நீயும் விரும்பியதில்லை
என்னிடம் உன் மரியாதையை

என்றும் நான் ஜென்ம ஜென்ம
உறவாய் உன் தங்கையாகவே பிறக்க வேண்டும்..பூமியில் பிறந்தால்........

என் வழியில்
என் வாழ்வில் நீ கலங்கரை விளக்கம் அண்ணா........
மாதா
பிதா
அண்ணா
குரு
தெய்வம்..தான் எப்போதும் எனக்கு வேதம்...........

தூரங்கள் நமை பிரித்தாலும்
பாசங்கள் பிரிக்குமா உயிர் தழுவும் உறவுகளை.......

தோழமைகளே கட்டாயம்...
ஒவ்வருவருக்கும்
தாய் --தந்தைக்கு அடுத்து நமை தாலாட்ட தேவை.....
அண்ணண் தங்கை உறவு...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..