Wednesday 17 December 2014

நட்பின் சுவாசம்-4

உன்னையும் என்னையும்
காதலாய் ...பாசமாய்
ஒன்று சேர்த்து....
கொஞ்சுகிறது.....நட்பு


வார்த்தைகள் முடிந்த
இடைவேளையில்
'அப்புறம்' என நீ கேட்கும்
"கமா" குறியில்
காலம் முடிச்சுப்போடுகிறது
விலக முடியாமல்


உன் பாசக் காட்டுக்குள்
அங்குமிங்கும் ஒடி.......
விழிகளில் மிரட்சியுடன்
வழிதவறிய
மான் குட்டியாய்
பரிதவிக்கிறது
என் நட்பு.....


ஓலைக் காத்தாடி
செய்து..ஓடி....ஓடி
பறக்கவிட்டு.....
போட்டி போட்டு..
சந்தோஷமாய்
ஜெயித்து தோற்கலாம்
ஓடி வாடி தோழி.....


மெல்ல மெல்ல
பனி உருகியது..
பூக்கள் எல்லாம்
உன் வண்ணம்
கொண்டு மலர்ந்தது
என் தோழமையே
உன் வருகையில்...



தீக்கங்குகளை நாவில் வைத்து
அனல் தெறிக்கும்...
பொறாமைகளுடன்...
நண்பர்களாய் ஊடுருவியுள்ளன
நம்மில் சில தீவிரவாதிகள்



வண்ணம் பூசிய சிட்டுக்குருவியாய்.....
வந்தமர்ந்து.....
வசதியான தோழமைகளுடன்
தனிமை தொலைத்து
உற்சாகமாய்.......
கூடு கட்டுகிறோம்....
முக நூலில்..


நட்புகளிலும்.....
உறவுகளிலும்.....
விதிவிலக்காய்
இருக்கத்தான் செய்கின்றன.....
துரோக முகமுடியணிந்த
கரும்புள்ளியாய்...சில
கரும் புலிகள்


நம்மை .........நம்மில்
தாய்மையாய்.....
சுவீகரித்துக்கொள்கிறது
நம் தோழமை.....




சிட்டுக்குருவிகளின்
மாநாட்டில்
கலந்து கொள்ளமுடியாமல்
சிறைபடுத்தும் உறவுத்திருவிழா.....
கைபிடித்து குலுக்கி ........
கன்னம் தட்டி சிரித்து.....
விழிகளுக்குள்
முகநூல் தோழமை
முகங்களை நிரப்பும் காலம் என்னில் எப்போது வரும் இனி...?


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..