Wednesday 17 December 2014

மழலை நேசங்கள் -2


பல இரவுகளில்......
தாலாட்ட வந்த தாயை
தூங்க வைத்து.....
விழித்துச் சிரிக்கிறது
குழந்தை..


பிரசவிக்கும் தாய்
அறிவதில்லை......
அடைகாத்த கருவிற்க்குள்
வளர்ந்தது.......
உலக அழிக்கும் தீவிரவாதம் என......


தந்தையின் மார்புகட்டிலில்
துயிலும் குழந்தையால்
உணரப்படுகிறது....
தாயின் கருவறை வெப்பம்..


என் பிடிவாதம் கொண்டு
குறும்பு பண்ணி......என்னிடம்
திட்டும் வாங்கும்போதெல்லாம்
அமைதியாய்....
என் திமிர்கொண்டு..என்னை..
முறைக்கிறது என் குழந்தை..


விரல் பிடித்து
நடக்க செய்கிறது
மறந்து போன
மழலைப் பாதையில்
நம்மை ..நம் குழந்தை...




பிடரி வைத்த
சிங்கங்களும்
சிறு குழந்தைகளாகும்......
தோழமையாய்
நெற்றி முட்டிக்கொள்ளும் அன்பினில்


எல்லா நிமிடங்களிலும்
எதிர்பார்பில்லாமல்
நமை ஆதரித்து
நம்.....சுக துக்கங்களை
சுகமாய் தாங்கும்
நம் தாய்மைக்குள்
எப்போதும்
நம்பிக்கையாய்....
பொதிகிறது....
நம் கைகள்.


தோல் சுருங்கிய முதுமையும்....
பால் கன்ன மழலையும்........
காலத்தின் தெவிட்டாத
அனுபவ அழகுகள்..



நாம் இழந்ததை
எப்போதும் நம்முடன்
இருப்பதாய்
நினைத்து
வரைந்து...வாழ....
ஆசைப்படுகிறது....
குழந்தை மனசு.......!


இமைமூடாமல்
ரசித்து காப்பதில்
இரண்டாவது குழந்தைக்கு
இன்னொரு தாயாகிறது
முதல் குழந்தை


பத்து மாதம் மடி சுமந்த
தாய்மையின் நாள்களுக்கும்
பாசத்திற்க்கும்......
சற்றும் குறையாதது....
காலம் முழுவதும்
கண்ணில் வைத்து தாங்கும்
தகப்பனின் பாசம்....


மழலைகளின் புன்னகை
எப்போதும்
மகிழ்ச்சியை மட்டுமே
நம்மில் விதைத்து........
மனதை அழுத்தும்
பாரங்களை
'களை'யென
களைந்து செல்கிறது
நொடிப்பொழுதில்....
நம்மிலிருந்து


கண்மூடி
முத்தமிட
கன்னம் காட்டும்
போதெல்லாம்....
குழந்தையாய்
கடித்து சிரிக்கிறாய் காதலே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..