பணமிருக்கும் மனங்கள்
எளிதாய் நட்டுவிடலாம்
ஓர் பள்ளியையும்
ஆலயத்தையும்
ஊருக்கு பொதுவாய்
எங்கிருந்து வேரூன்ற முடியும்
அத்தியாவசிய தேவை தீர்த்து
உயிரினக் கசடுகளை
உல்லாசபயணம் அழைத்துச் செல்லும்
ஓர்
புண்ணிய நதியை
பசுமைக்கொலையாளிகள்
அறியுமா..
வறண்ட பூமி வெடிக்க
வரும்
தலைமுறைக்கு
தான் செய்யும் பாதகம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..