*********************************************
காதல்
***********
சொல்லில் சொல்லி இதழசைக்க
நடுபிரளும் உமிழ் நாக்குதட்டி உணர்வூறி
உதடுகள் ஒட்டாமல்...உள்ளம் இணைந்து
இனிக்கும்.....மதுத்தேன்
துள்ளும் பிரியமாய்...துவளும் வேதமாய்
தொட்டணைத்த தீண்டல்கள்
தொட்டு தொட்டு நினைவு ருசிக்க
ஒட்டும் உள்நாக்கு சுவையாய்
உயிர்பிரியம் தரும் முக்கனி கூடல்
அசைவமெனில்
அன்பின் நேசமாய் ஆளுமை ப்ரியமாய்
பாசத்தின் பூக்காடாய்.....தொடாத நாதமாய்
உணர்வூடும் சவ்வூடுபரவல் ...இதனில் சைவம்
உயிரென ஜீவன் கொள்ளும்
அஃறினையையும் ஆட்டிபடைக்கும் துடிப்பே
சிலருக்கு பசியாய்..பலருக்கு தாகமாய் வரும் உணர்வுணவே
தேக எல்லையில்உன்னின் அசைவம்
மன நிறுத்தத்தில் உன்னின் சைவம்
பிடித்தல் காதலா..பிடித்தலை..
பிடிவாதமாய் திரும்ப திரும்ப நினைத்தல் காதலா
நீ ரசவாதமா...ரசாயண மாற்றமா
வேதமா..வேதியலா...என்றே
இது காதல் என்று மொழியறுக்க முடியாமல்..அல்லாடுது
எது காதல் என்று வரையறுக்க முடியா மனிதம்
ஆதாம் ஏவாளாய் நட்பிணைந்த இனம்
ஆப்பிள் உண்டு கருநாக தேகம் தீண்ட
அவனிபெருத்த மனிதக் காட்டில்
இறையென சிற்பம் செய்து...ஒழுக்கவேள்வி செய்கிறான்
வாழ்ந்து முடித்த ஏதோ ஒரு நூற்றாண்டு எம் மனிதன்
விருப்பம்...அன்பு ....பாசம்...நேசம்
பசி .....தாகம்.....சுவாசம்...துடிப்பு ..நட்பு.....கற்பனை...தான் காதலெனில்
இங்கு அனைவருமே ஆயுள் காதலர்களே
கோபம் மன்னிப்பு கருணை...சகிப்பு
பொறுமை தீண்டல்.பக்தி...தான் காதலெனில்
பலர் சந்தர்ப்பசூழல்வசக் காதலர்கள்
ஒழுக்கமே காதலெனில்....நேசிக்கும் உயிர்களை....
நேர்மையான நம்பிக்கையாய் அணைக்கும் பாதுகாப்பே ....
உண்மையின் ஒளிச்சுடரே
நீயின்றி நானில்லை என்றில்லாமல்
நீயெனில் நான் எதுவுமில்லை...
அனைத்துமாகி எனை ஆளும் நேசசக்தியே
உள்ளோடும் சுவாசித்தின்....உயிர்துடிப்பே
கசிகிறேன்...கண்ணீர் மல்கிறேன் ..நினைக்கிறேன்
நினைவு தப்புகிறேன்........நிமிடம் தோறும் வெந்து எரிகிறேன்
ஆள்கிறாய் எனை நீ எனும் ஆனந்த தீயில்
என்றே உருகி உருகி தவிக்கும் உணர்வுத்தவமாய்
எனை ஏற்றும் சிகரம் நீ ...விடைபெறின் வீழ்த்தும்
அச்சாணியும் நீ..என்றே சுழல்சக்கரமிடும்
சூட்சம வாழ்வு நாதமே...காதல்
என் நேசக் கருப்பை..இறை நீ
என்றே மன்றாடும் உணர்வுச் சுழல் சிக்கும் ...
உயிரோசைமொழி வேதம்
நேசித்து ..நேசிக்கப்பட்டு...நிம்மதி சூல்
உலகு காண்போம் ஆயுள் காதலர்களே...............
இனிய நேச தின வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..