Thursday, 12 February 2015

சாரல் துளியழகி

வந்தும்
வாசல்ஓடி வரவேற்கவில்லை

கோபம் மழைத்தோழிக்கு

ஜன்னல் திறந்து
அறைந்து போகிறாள்

வந்தால்
துவட்ட முடியாமல்
துவண்டு நடுங்கி
நனைத்து விடுவேன்
அவன் நினைவணைவில்

என்று
நீ அறியாததாடி

என் கோபச் சாரல்
துளியழகியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..