Thursday, 12 February 2015

துடிக்கும் எனைக் கொண்டு

அடித்து ஊட்டி
தட்டி வருடி
தலை கோதி
மடி தூங்க வைக்க

அம்மாவும்வேண்டும்

போட்டி சண்டையிட்டு
விரல் பிடித்து
விடாமல் கேள்வி கேட்டு
உலகை நடையளக்க
உன்னைப் பார்த்து
என்னைநான்
வடிவமைக்க

நீயும் வேண்டும் அப்பா

இதய இடைவெளி வரும்
போதெல்லாம்

துடிக்கும்
எனைக் கொண்டு
அதை நிரப்புகளேன்

இருவரும்.... ப்ளீஸ்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..