Tuesday, 17 February 2015

சகலமுமாகி வாழ்வு நிரப்புகிறாள்

சொல் தவங்க
செயலாகி

கால் தளர
வழியாகி

தடுமாறி
வளையும் முதுமையிலும்
தன்னோடு எனையும்
சுமந்து

சகலமுமாகி வாழ்வு
நிரப்புகிறாள்

திமிர் அதிகாரமாய்
புளுத்து போன என்னை

புள்ளையென கழுவி துடைத்து
உசிர் காக்கும்..சம்சாரமான

எங்குலசாமி கன்னியாத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..