Tuesday, 17 February 2015

மவுனமடிக்குள்

கனத்த மெளனத்தால்
களவாடப்பட்டிருந்தவளை

வார்த்தை புசிக்க
அழைத்தேன்

பார்வையால் மறுத்து
பழையபடி
தொலைந்து போனாள்

தன் சிறகு தானொடித்து
கூடு சுருங்கும்....
அவள் காயஅம்பு
நானாயிருப்பேனோ
மறுகி

நானும் தொலைக்கிறேன்
என்னை
அவள் மவுனமடிக்குள்

திமிர்ச்சொல் அடித்தது
நானெனினும்

தலைகோதி
தன்னுள் இழுத்துக் கொள்கிறாள்

தாய்மையாகவே பிறந்த
பொன் மகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..