என்ன சொல்ல
என்னைச் சொல்ல
என்னைத்தான் சொல்லப் போகிறேன்
என நீ எண்ணியிருந்தும்
என் எண்ணம் தெரிந்திருந்தும்
விடாத பார்வை
தொடாமல் பார்த்து
உன்னில் நான் மயங்கிய அழகுகேட்டு
போதையேற்றி கிறங்கிய பின்னே
விழி அகற்றுகிறாயே தலைவா
வார்த்தைகள் தந்தியடிக்க
தளும்பும் வெட்கம் தாங்குமோ
நெகிழ்ந்த குழைவுப் பெண்மை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..