Thursday 18 December 2014

நேசத்தின் வாழ்வியல்-3

சோதனை கடவுள் படைத்த
வேதனை மானுடத்தில்..........
சிரித்துக்கொண்டிருக்கும்
முகமுடிக்குள் எல்லாம்
எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும்....
சோக நிழல் ஆடும் முகம்..





அறிவுக் கதவை
திறக்கும் சாவியை கையிலேயே வைத்துக்கொண்டு
பெரும்பாலும் நம் நிழல்களை
கண்டு பயந்து தான்
ஒளிந்துகொள்கிறோம்..
கோழைகளாய்........


தேநீர் அருந்தும்
நிமிடங்கள் கூட
நமக்கு.....
சொந்தமில்லாமல்....
தொடரோட்டமாய் ஓடுகிறோம்
மத்திம வயதில்
தொலைந்ததை தேடுவதாய்.....
இருப்பதை தொலைத்து....


உன் ஒற்றை விரல்
தீண்டும் ஆதரவில்...
உயிரை துச்சமென
நினைத்து.....
சோதனைகளை
சாதனைகளாய் மாற்றுகிறது
என் வாழ்க்கை.



ஒவ்வரு ஆன்மாவிற்க்குள்ளும் 
விடாமுயற்சியாய் ஒளிந்துள்ளது 
வெற்றியின் திறவுகோல்


தனக்கு முன் நிறுத்தப்படும்
ராணியால் தான்
தோற்றுப்போகிறார்கள்
பெரும் பாலும்
சதுரங்க ராஜாக்கள்..கூட.


நாம் பின்பற்றும்
வாழ்க்கையின் பாதை
எப்போதும்
விடாமுயற்சி செய்து
ஜெயிப்பவர்களாலே
வரையப் படுகிறது...


நம்மிடல் கட்டைவிரல்
உயர்த்திக்காட்டும்
எதிரிகளால்
தீர்மாணிக்கப்படுகிறது....
நம் வாழ்க்கையின்
திருப்பு முனை...பயணங்கள்


மரங்களை அழித்து
பசுமைகள் அறுக்கபடும்
பூமியாய்.......
மனிதம் அறுத்து
மயானம் பயிரிடும்
விந்தை மனிதன்..


விழுங்கும்
மரணங்களுக்கு
வெகு
நெருக்கத்தில் தான்
விடிந்து
கொண்டுள்ளது
நம்
ஒவ்வரு ஜனனமும்...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..