Sunday, 2 August 2015

நினைவு சேமிப்பாய்

பழுப்பேறிய காகிதத்தில்
பக்கம் பக்கமாய்
பாதிபுரியாத
கல்வெட்டு எழுத்துக்கள்

ஓடி சேகரித்த
கரையோர சோவிகள்

கடல் மூச்சு வாங்கும் வலம்பொரி சங்கு

விடியல் வெளிச்சம் தரும்
தூண்டி சிம்னி....

இறந்த பின் உடைக்கப்பட்ட
தாத்தனின் பெட்டியில்

அடக்கமாய்
துயிலுறங்கினாள்

அவரின் 75 வயது
காதல் கிழத்தி

நினைவு சேமிப்பாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..