நலப்’பூ’...நட்’பூ’...நண்’பூ’
**********************************
பூப்பூவாய் பூத்த பூ
பூவிலே சிறந்த பூ
புத்துணர்வு தரும் பூ
புதுமுகபொலிவு பூ
பூ மண..பூமனப் பூ
தன்னலமில்லாப் பூ
தாளாது
தவிக்கும் போது
தாவியணைக்கும் பூ
தான் சிரிக்க பார்த்து
தன்னை வருத்தும் பூ
வாடாத பூ வசந்த பூ
சோகமில்லாத பூ
சோதனையிலும்
துணை நிற்க்கும் பூ
பிரிந்தபோதும்
பிரிவில்லாத சொந்தமாய்
நினைவு சேமிக்கும் பூ
தாலாட்டும் பூ
தட்டிக்கொடுத்து தந்தையான பூ
உடன் தோள்கொடுக்கும்
உதிரம் பகிராத பூ
நம்பிக்கை தரும் பூ
தைரியம் வரும் பூ
கண்ணீர் துடைக்கும் பூ
காவல் நிற்கும் பூ
கரமிணைக்கும் பூ
மகிழ்வுப் பூ
மனதினிய பூ
ஐந்திணை ஆவாரம்பூ
ஆறாம்திணை உறவுப்பூ
உயிர் விழிக்கும் விழியெங்கும்
விடியலாய் மலரும் பூ
இடுகாடுவரை வரும்
இணையில்லா உணர்வுப் பூ
என்றும் இளமையாய் மனம் துள்ள
இளந்தோள் சிந்தை தரும் பூ
சிரிக்க ..ரசித்து
சிந்திக்க துணையாகி
வருந்த கரமிணைத்து
வாட ..தைரியமாகி
தோல்வியில் தோளணைக்கும்
உண்மைப் பூ..நேர்மைபூ
நட்பூ எனும்
தொப்புள்கொடியில்லா
தாய் மனப் பூ வை
தாய்வீட்டுக் கூடாகிய
முகமறியாத முகநூலில்
தோழமைப்பூவாய்...தொடுத்து
கரமிணைத்து...கற் பூ எனப் போற்றுவோம்
கனிநிறைபிரிய தோழமைகளே
இன்றென ஒருநாள் என்றில்லாமல்
இமைவிழிக்கும் நாளெல்லாம்
இனிய வாழ்த்துக்கள்...நண் பூக்களே !!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..