கும்மியடிக்குது
கூத்தாடுது
குதுகலமாகுது
குழந்தைகள் கொஞ்சி இழுக்குது....
சுதந்திர பா “ரதம்” 69
நேருவாய் காந்தியாய்...
நேதாஜியாய்..இந்திராவாய்
கப்பலோட்டியாய்
எம் மீசைத்திமிரோனாய்
பாரதமாதாவாய்..பார்கொடிகாத் த குமரனாய்
கதிரெழுந்த...குருத்தோலை
பிள்ளைகள் பிரிய மடலணிய
பட்டாசு சந்தோஷங்களுடன்
பால் இனிப்பு பொங்க
பட்டொளிவீசி பறக்கும் எம் சுவாசக் கொடியுடன்
செழுமை..தியாக உதிரமாக
பசுமை..மன செழுமை எழ
வெண்மை...பசும் உள்ளம் தர
சுழல்வாழ்வு சாட்சியாய்
சுற்றும் அசோக சக்கரம் அமைதியணைக்க
உயிர்காற்றாடுகிறாள் எம் தியாக திமிர் மாதா
மாராப்பு கொடியாய் மானஒளிவீசி
நேர்மையாடி..நேர் உண்மையாடி
வேற்றுமொழி பேசினும்,,வேரென பிரியமணைத்து
ஒற்றுமையாய்..ஓங்குதிமிர் நிறைந்து
இந்தியனெனும் இளங்குருதி கொப்பளிக்க
என்நாடு..என் மக்கள் ..என் சொந்தமென
இன்றும் நின்று ..இயற்கை சுழல் தாங்கி
எல்லை காக்கும் ..
எம்குல மறவீர சிப்பாய்களுக்கு
சீரெழுந்து வணக்கம் செய்து
வந்தே மாதரம் ....
கூன் நிமிர்ந்த குலங்களை உயிர் நிமிர்த்தி
சுவாசம் தந்த தியாகபிரமங்களை
மண நிறை மலர்தூவி உயர் வணங்கி
வாருங்கள் ..வாழ்த்துப் பண் பாடி
விளையாட்டாய் ..விளையாட்டில் தோன்றும் உணர்வை
விவேகநெஞ்சில் உரமணைத்து
இந்தியனெனும் திமிர் நிமிர
நித்தம் புத்தம் விடியல் காணும்
தாய்மை போற்றி..ஆடிப்பாடி.... குழந்தைகளாகி
தொடர்பிரியம் தொட்டிழுப்போம்
ஆனந்த தெப்ப...சுதந்திர பா””ரதம் “”69
இனிய வாழ்த்துக்கள்...தோழமைகளே
ஜெய்ஹிந்த்
—கூத்தாடுது
குதுகலமாகுது
குழந்தைகள் கொஞ்சி இழுக்குது....
சுதந்திர பா “ரதம்” 69
நேருவாய் காந்தியாய்...
நேதாஜியாய்..இந்திராவாய்
கப்பலோட்டியாய்
எம் மீசைத்திமிரோனாய்
பாரதமாதாவாய்..பார்கொடிகாத்
கதிரெழுந்த...குருத்தோலை
பிள்ளைகள் பிரிய மடலணிய
பட்டாசு சந்தோஷங்களுடன்
பால் இனிப்பு பொங்க
பட்டொளிவீசி பறக்கும் எம் சுவாசக் கொடியுடன்
செழுமை..தியாக உதிரமாக
பசுமை..மன செழுமை எழ
வெண்மை...பசும் உள்ளம் தர
சுழல்வாழ்வு சாட்சியாய்
சுற்றும் அசோக சக்கரம் அமைதியணைக்க
உயிர்காற்றாடுகிறாள் எம் தியாக திமிர் மாதா
மாராப்பு கொடியாய் மானஒளிவீசி
நேர்மையாடி..நேர் உண்மையாடி
வேற்றுமொழி பேசினும்,,வேரென பிரியமணைத்து
ஒற்றுமையாய்..ஓங்குதிமிர் நிறைந்து
இந்தியனெனும் இளங்குருதி கொப்பளிக்க
என்நாடு..என் மக்கள் ..என் சொந்தமென
இன்றும் நின்று ..இயற்கை சுழல் தாங்கி
எல்லை காக்கும் ..
எம்குல மறவீர சிப்பாய்களுக்கு
சீரெழுந்து வணக்கம் செய்து
வந்தே மாதரம் ....
கூன் நிமிர்ந்த குலங்களை உயிர் நிமிர்த்தி
சுவாசம் தந்த தியாகபிரமங்களை
மண நிறை மலர்தூவி உயர் வணங்கி
வாருங்கள் ..வாழ்த்துப் பண் பாடி
விளையாட்டாய் ..விளையாட்டில் தோன்றும் உணர்வை
விவேகநெஞ்சில் உரமணைத்து
இந்தியனெனும் திமிர் நிமிர
நித்தம் புத்தம் விடியல் காணும்
தாய்மை போற்றி..ஆடிப்பாடி.... குழந்தைகளாகி
தொடர்பிரியம் தொட்டிழுப்போம்
ஆனந்த தெப்ப...சுதந்திர பா””ரதம் “”69
இனிய வாழ்த்துக்கள்...தோழமைகளே
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..