Sunday, 30 August 2015

நிகழ்வாய் நானிருக்க

நிகழ்வாய் நானிருக்க
நினைவாய் மாறிவிட்டதாய்
நிழல் கண்ணீராடுகிறாய்

வாய்ப் பூ வசந்தங்கள் தான்
உன் மனப் பூ மணமா

எவராலும்
நிரப்பட முடியா இடத்தை
நான் நினைவெடுத்தாலும்

எங்கோ இருக்கிறது
ஓர் சிறு இடைவெளி

இப்படி நீ இயல்பு
விழி கசிய

உன்மனக்கதறல்
என்னுயிர்
உதிரவலிக் கீறும்
எனத் தெரிந்தும்

நானாது நம்பிக்கையெனில்
நானிருக்கும் வரை
வருந்தமணைக்கலாமா
உன் வளர்பிள்ளை மனம்

அழைக்கிறேனடி நிழலே
ஆயுள்கரம் நீட்டி
அன்புத் துயிலுறங்கு

என்றும் என் ...
நேசக் கைவளையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..