Sunday, 30 August 2015

வைக்கப்பட்டது ..அந்த கல்

வயித்து புள்ளையோடு
திரும்பி
வராத வழி சென்ற
உமையாளுக்காக ஊர் எல்லையில்
வைக்கப்பட்டது ..அந்த கல்

பரிதாபத்தோடு பாதி பேர்
பயத்தோடு மீதி பேர் கடக்க

அவ முந்தி பெத்த
மூணு மட்டும்
நின்னு ஒரு நிமிசம்
நித்தம் வணங்கிட்டு போகுது

தன் அம்மன் சாமிய !

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..