Monday, 31 August 2015

மது மணிப்புறாக்கள்

அந்தி மாலை
இனியவள் தோளிடித்து
மொட்டை மாடியமர்ந்து

எட்ட நின்று
கொஞ்சி காதலுறும்
ஜோடிப்புறா கதை சொன்னேன்

இணையொன்று பிரிந்தால்
துணையின்றி வாழாது

உயரே உயரே ...
சிறகுவலிக்க பறந்து
சட்டென பூமி வீழ்ந்து
உயிர் விடுமென

முழங்காலிட்டு
ஜிமிக்கியாட தலையாட்டிக்
கொண்டிருந்தவள்

கிட்ட நெருங்கி
மூக்கு உரசி

அலட்டிகாம சொன்னா......

"""""நானும் தான்"'""

கண்கள் பனிக்க
உடன் பாய்ந்து
வலிக்க இறுக்கிக்
கட்டிக் கொண்டேன்
வாழ்வானவளை

சிறகடித்து வெட்கம்
சிலிர்க்க சிரிக்கிறது

மாடி வந்த
மது மணிப்புறாக்கள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..