Thursday, 30 July 2015

நீ என் செந்தமிழ்




செம்மொழி கொண்டு
நான் உன்னைச் செதுக்குகையில்
நீ என் செந்தமிழ்

கோபம் கொண்டு உன்னை நான் 
கையில் எடுக்க...நீ என் கொடுந்தமிழ்

பாசம் மிஞ்சி உன்னில்
நான் சிணுங்குகையில்
நீ எனக்கு மட்டுமான..தனித்தமிழ்

களவு கொண்டு
நான்உனைக் கட்டியணைக்க
நீ என் கரிசல்தமிழ்

நலம் நாடி நாடி
உன்னில் நான் தோள் சாய
என்றும் நீ என் நற்றமிழ்

முத்தப் ப்ரியங்களாய் நான்
உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிக்
களமாடி மடியிலேந்தி..
முத்தமாட முத்தமாட
நீ என் முத்தமிழ்

உயிர்உளியெடுத்து உன்னில்
நான் என் நேசம் செதுக்க

உன் வாகையில் எனை வளைத்து
என்னில் உனை புதைத்து

காதல் முழுமையாடி
களவு முன்னோட்டம் தேடும்

எனக்கான உலகத்தில்
நீ,,,,,,,,,,,நீயென,,,,,,,

பரந்து விரிந்த..... உன்
கை அணைவுக்குள்...
எனை முகிழ்த்தும்

என் உயிர்மொழி ஆளுமை தலைவா
என்றும் நீ,,,,,!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..