Friday 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-31

பகலிலும்
இரவிலும்
தொலைதூரமாய் போன
அவளின் நினைவுகளின் மீதே
தோள் சாய்ந்து
உறக்கம் கொள்கிறது
என் காதல்


உன்னிடம்
காதல்
சொல்ல வந்து
சொல்லமுடியாமல்
இப்படித்தான்......
உதடுகள் வேர்க்க
இதழ்கள் மூடி
வார்த்தைகளை விழுங்கிறேன்
ஒவ்வருமுறையும்......



படிகள் தோறும்
பூக்கள் விரித்து
உன் பாதங்கள் ஏற
காதலாய் தவமிருக்கிறது
என் பருவம்


என்னால் நம்பமுடியவில்லை
என் கண்களையே...........
எப்போது கண்ணாடியில்
எனைப்பார்த்தாலும்
எனை மீறி என்னில்
பிரமாண்டமாய்
வளர்ந்திருக்கும்
நீயே தெரிகிறாய் காதலே


ஏழ்மையில் இருக்கும்
எல்லையில்லா செல்வம்
புன்(ன)நகை



யார் கட்டி விட்டது
இந்த பட்டாம்பூச்சி
இறக்கையை.....
காதல் மனசுக்கு.........
எப்போதும் எனக்குள்
அடங்க மறுத்து...
எனையும் தூக்கி பறக்கிறதே


சிறகுகள் விரித்த
தேவன் /தேவதை
துணைகளை தேடுகிறது
பருவக் கனவுகளில் இளமை.........


உன் கூந்தல்
அருவிக் காட்டுக்குள்....
குளுமையாய்
பள்ளிகொள்கிறது....
பகல் எல்லாம்
அனலடிக்கும்
என் பொழுதுகள்..


நித்தமும் உன்னை
நினைவுகளாய்
பருகி..புத்துணர்சியோடு
துள்ளித்திரிகிறது
என் காதல்


உன் காதல்
குழந்தையாகி
அடிக்கடி
என்னில் அதிகம்
வாங்கும் திட்டு


உன் ஒற்றை வரி பதிலில்....
வாழவும் .......
சாகவும்...
துணிகிறது
என் உயிர்


பூக்களை எல்லாம்
பனித்துளி முத்தமிட்டு
எழுப்புகிறான் ஆதவன்.....
அதிகாலை விடியலாய்.


உன்னை
எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்ணீராய் என்னில்
உருகி வழிகிறது
நம் காதல்



நம் சந்தோஷங்கள்
சங்கமித்த....
புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம்..........
சொல்லாமல் கொள்ளாமல்
என்னிலிருந்து ஓடிவிடுகிடுறது
என் பொய்க்கோபங்கள்...


விடை கொடுக்கும் போது
விலகாமல்
இறுக்கமாய்
பிடித்துக்கொள்கிறது
காதல் ..இன்னும் கொஞ்சம் நிமிடங்களை..
தவிக்கும் தன் கரங்களுக்குள்...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..