Monday, 6 July 2015

திமிரெழுந்த தியாக திருமகன்

காக்கி உடுப்பேந்தி
கவசகுண்டல விழி சிவப்புடன்
ஆச பாச ஈரம் துடைத்து

ஊசியென உடல் குத்தும்
வெயில் பனி கொடுமை
வெந்து உருகி தனிந்து

வீறு கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி
வியர்வை வழிய வலிநின்று

ருசி மறந்து பசி உண்டு
கிடைத்த இடம் படுத்து

உறக்கம் மறந்து காத்து
குடும்ப நினைவு புறந்தள்ளி

உயிர் நிம்மதி தரும்

சக்தியெழு மலைமகளின்
வீர வழி மறவனாகி

திமிரெழுந்த தியாக திருமகன்களையே

வான் வெள்ளை காகித
எங்கோ ஒர் கரும்புள்ளி
ஊழல்மேகங்களையே உற்றுநோக்கி
உவகைகேலியிட்டு
உள்ளம் மகிழும் சிறுமையாகிறோம்

அரண் எழுந்த காவல்துறை
அருமை பெருமை போற்ற மறந்த
பேதையான நாம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..