Monday, 6 July 2015

நிலச்சூனியம்

எவர் வந்து
எவர் போனாலும்

என்ன கேட்டாலும்

மங்கிய கண்ணில்
ஒளிக் காவலேந்தி

எல்லா கேள்விக்கும்
சைகையிலேயே
பதில் தந்து

நிலச்சூனியம்
விரவிக்கிடக்கிறா

தள்ளாத பொழைப்ப
தள்ளி உசிரு கடத்தி

தோல் சுருங்கி
விதி நீண்ட
விசாலி அப்பத்தா.!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..