Wednesday, 1 July 2015

ஓம்காரி அலங்காரி

ஓம்காரி அலங்காரி
ஓதுபொருள் தத்துவ சிங்காரி
ஒப்பில்லா மாணிக்க ஒய்யாரி
ஓம் மெனும் நாயகன் தாய்காரி

வீரத்திரு அடை காரி
விக்னேஸ்வரன் அன்னைகாரி

மங்கல குங்குமகாரி
மகிழம்பூ மணத்துகாரி
மா திரு பெருமைகாரி
மகிழ்வுதரும் மனத்துகாரி

செய்யொளிபரப்பி
செயலலொலி ஒலித்து
செவ்வாடை அணிந்து
செழுமைகொஞ்சும் குணத்துகாரி

சிவனவனின் இடத்துக்காரி
அடிமுடி தெரியாதவனை
அசைச்சாளும் ஆசைநெஞ்சுக்காரி

அதிரூபி ஆனந்த சொரூபகாரி
பொன்கழஞ்சு பிரியக்காரி
பொல்லாதுயர் விலக்கும் அகங்காரி

சக்திதிரு மலைமகளே
மணக்கோலம் கண்ட
மா பிரிய பார்வதியே

மஞ்சள்திரு முகத்தாளே
மங்கையர் தாலி காப்பவளே

தழைத்த குலம் செழித்தோங்க அருளும்
தவத்திரு தாட்சாயிணியே

அன்னையென
வணங்கி உமை உன்னை...
வாழ்த்தி பா எழுதி

பிறந்த பிறவி பிணி நீங்க

பிறக்கும் பிறவி தோறும்
உம் பெண்மை போற்றி புகழ

அனல் முகத்தாளின் அருள்திருவடி பற்றி பாடி

சக்தி உமையாளே கதியென சரணடைகிறோம்
தாய்மையே

ஓம் சக்தி ஓம்
 — with Meera Blossom.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..