Monday, 6 July 2015

அழகென வந்த நிறையே

அழகென வந்த நிறையே
அருளென ஒளிரும் சுடரே

அமைதியென கனியும் கனியே
அற்புதம் தரும் வல்லமை வாழ்வே

அரவிந்த ஸ்தூலத்தின் ஆற்றல் வழியே
அன்னையென உருவெழுந்த திருவே

ஆகம கடலே..ஆசைநிறை பொருளே
ஆழ்தவ வேதமே.....ஆட்கொள்ளும் வசந்தமே

அன்பே பிரியமே அறிவே கருணையே

என்றும் என்னுள் ஒளியாய் நிறையும் பிரமமே

உன்னை மொழி அலங்கரித்து ..நித்தம் உருகி
நிர்மல பிரியமேந்த... நிம்மதி சூழ் வாழ்வளிக்கும்

வசந்தபொன்குடையே................

என் அன்னையே ..உன் திருவடிகள் என்றும்
சரணம் சரணம் பரிபூரணசரணம் பவித்திரபரமமே !

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..