நிழற்பட நிகழ்வு தினம்... 29.06.15
உள் ஒளியும் உயிரொளியை
நகலெடுத்து நம்மின்
முகமென
உருவென உயிர்தந்து
ரசனைப்படுத்திய
அறிமுக அடையாள நாள்
உலகாளும் ஆதவனே
முதல் நிழல் பிம்ப அடையாளி எனினும்
இயற்கையை விஞ்சவே
விளைகிறது ...மனித சிறு மூளை
தன்னை எடுத்தவன்
நிழல்களை எடுக்க
இன்று நிகழ்வு சொல்லும்
ஒரு மாற்ற முடியாத
மனித அங்கமாகிவிட்டது
நிழற்படம்
ஒளியாலும் ஒலி தர முடியும்
என்றே இங்கே
வித்தகர்கள் பலர் பரவி வியப்பிகின்றனர்
விலங்கின பரிணாம மனிதனின்
பாராளும் வித்தைகளில்
படப்பிடிப்பின் பாங்காய்
திரைப்பட முன்னோடியாய்
செய்திதுறை துப்பறிவாளனாய்
குடும்ப அங்க கால அடையாளமாய்
தன்பிம்பம் ரசிக்கும் தன்னழகு கண்ணாடியாய்
புகைவழி நிழலாகி
புகைப்படம் என பெயரெடுத்த
பெருநிலக் கிழத்தியே
ஊன்பசைமுறை உள்ளொளி தத்துவமே
பதினேழாம் நூற்றாண்டின்
பெருமைமிகு பிறப்பே
அறிவு இயலையும்
அறிவியலையும்...அச்சாணி கொண்டு
ஆட்டிப்படைக்கும்
ரசனை..... ரசாயண
அற்புதக் கண்ணடிப்பு கண்டுபிடிப்பே
என்னின் ...கவிமொழி கண்ணே
எந்தருமை நிழற்படமே...
உன்னில் அனைவரும்
அழகாய் உணர்வு ரசிக்க
நான் மொழியாய் துள்ளி எழுகிறேன் நித்தமும்
என் கவி வழிப்பாதையில்
நீயும் என் உயிர் சிநேகிதியே ....
புதுமை ..புகைப்பட பதுமையே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..