அதிகாலை கனவில்
அம்மா வந்தாள்
பிடித்த பந்து முல்லை
பாச மல்லி தொடுத்த பூ எடுத்து
வழக்கம்போலான
வாழ்வியல் தடங்களுடன்
எப்போதும் போல்
எல்லாம் சொல்ல
பொறுமையாய் புலம்பல் கேட்டு
புன்னகையோடு தவறு சுட்டினாள்
போ ம்மா நீஎப்போதும்
என்னை தவறென்பாய்
என்றே சிணுங்க
இழுத்து கட்டி சிரித்து
நானில்லாது யார் சொல்வார்
நல்வழியென்றாய்....
மெல்ல வந்த
வெளிச்சத்தில்
அவள் உரு மங்க
போகிறாயா....
கேட்கும் முன்
வியர்த்து விழித்தேன்
போகவில்லை
கனவெனவே
நினைவுறைந்தாள்
இன்று முழுவதும்
என்னுடனே....!!!
அம்மா வந்தாள்
பிடித்த பந்து முல்லை
பாச மல்லி தொடுத்த பூ எடுத்து
வழக்கம்போலான
வாழ்வியல் தடங்களுடன்
எப்போதும் போல்
எல்லாம் சொல்ல
பொறுமையாய் புலம்பல் கேட்டு
புன்னகையோடு தவறு சுட்டினாள்
போ ம்மா நீஎப்போதும்
என்னை தவறென்பாய்
என்றே சிணுங்க
இழுத்து கட்டி சிரித்து
நானில்லாது யார் சொல்வார்
நல்வழியென்றாய்....
மெல்ல வந்த
வெளிச்சத்தில்
அவள் உரு மங்க
போகிறாயா....
கேட்கும் முன்
வியர்த்து விழித்தேன்
போகவில்லை
கனவெனவே
நினைவுறைந்தாள்
இன்று முழுவதும்
என்னுடனே....!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..