Saturday, 25 July 2015

இனிய வாழ்த்துக்கள் தம்பி

ஊன் உருக உயிர் உருக
உயிரென உயிர் மெய் உருக

உறவென வந்து
அக்கா என்றழைத்த போதும்
அம்மா என்றே குரலொலி உணர்வு தந்த
அன்புத் தம்பிக்கு

என்னின் முதல் குழந்தைக்கு Sedhu Raj
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எதிர்பாராமல் இமையணைக்கும்
உதிர சொந்தமாய்....
எந்தப் பிறவியிலோ...
நீ என்னில் பிறந்தாயா..நான் உன்னில் வளர்ந்தேனா

இந்தப் பிறப்பில் நாம் சந்திக்க

மொழிதொட்ட கருத்து கவனமிழுக்க
நண்பனென வந்து...அக்கா என்று
உரிமையழைத்தாய்...

முகம் பார்க்கமலே முன்அன்பை நிறுத்தி
பாசத்தின் ஈரத்தை பிரியங்களில்
காட்டி நெகிழ வைத்தாய்...

என்றும் எனக்கு பெரும் நம்பிக்கையாய்
இருக்கும் பாசம் நீ
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
என்பதும் உனக்கே பொருந்தும்

விழிகலங்கும் முன் வேறு மொழிபேசி
சிரிக்க வைத்து விடுவாய்

சொந்தம் நீ என் மூத்தவள்
என்று உன்னோடு மட்டுமில்லாமல்
உனக்கென உடன்சூழ்ந்த அனைவரிடமும்
அன்பென பகிர்ந்து .சொல்ல வைத்தாய்

பக்குவத்தில் பந்தமாடும் பிரியத்தில்
பார் போற்றும் பாசத்தில்
இமையென காக்கும் கனிவில்
இனிமையான சொந்தமே

விளையாட்டாய் நான் உரிமை கேட்க
உடன்பிறந்தவள் கையினாலே
தாரைவார்த்து வழங்க வைத்தாய்

மாமா மாமா என்று நீ அழைக்கும் போதும்
மாப்ள என்று கதிர் பதில் சொல்லும் போதும்
பெருமிதமாய் விழிகள் குளம் கட்டும்

என் தளபதி என்றே ..என்றும் உன்னை
உரிமையாய் சொல்வார் கதிர்

எத்தனை ஜென்ம ஆயுள் தவம்
உன் பாசம்....

உரிமையாய் கொண்டாடி
தாய்வீட்டு சீராடி..கிளம்பும் போது
அத்தனையும் கூடை நிறைத்து
எங்க அக்காவுக்கு செய்ய நாங்க
கொடுத்து வைச்சிருக்கனும் நு
சொன்ன சொல் இருக்கே

இன்றும் என்னை ஆனந்தமாய்
நினைத்து நினைத்து
அழவைக்கும் சொல் அது

பிள்ளையென என்னில் பிரியமாடி
கருநிறைந்த உறவே
கனிவு நிறை தம்பியே

அன்னை மனமொழியெடுத்து
அருந்தவ வார்த்தைமலர் தொடுத்து
அன்பெனும் மிகுதிவிகுதியால்
ஆயுள்தரும் சொந்தம் உன்னை

ஆசீர்வாதபிரியம் கொஞ்சி
நான் வணங்கும் அன்னைவணங்கி
வாழ்த்துகிறேன் டா

இன்றென மட்டுமில்லாது
நான் நிலமிருக்கும் வரை
என்றும் உம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும்
என் செல் அணுக்கள்

எங்கள் பரம்பரையின்
பெருமைமிகு வாரிசே...வாழவேண்டுமய்யா

நீ என்றும் என்றென்றும்..
இவ்வானந்த மகிழ்வாய்

இனிய வாழ்த்துக்கள் தம்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..