Sunday, 15 March 2015

நட்பே மழையே கவியே காட்டுத் தீயே


நட்பே மழையே கவியே காட்டுத் தீயே..ஜோதிSakthi Jothi
***** ******* ***** ************
நறுமண ....நேச பேழையே...இனிய வாழ்த்துக்கள்

ஆனந்த மணநாளில்.........அறிவுத்திருக்கோவிலில்
அமைதி தேடி வந்த எனக்கு.....

எதிர்பாராத இன்ப அதிர்வாய் நாதம் மீட்டியது
ஜோதியின் முக தரிசனம்

ஜோ வா...நான் நேசிக்கும் ப்ரியமா ..இத்தனை அருகிலா
என்ற அதிர்வில் இருந்து மீண்டு நான் விழிக்கும் முன்
இமை தட்டியது உருவம்...இல்லை அவர் போல் யாரோ வா

மரபுக்கவி உடைத்து தனக்கென தனிப்பாதை மணக்கும் என் காட்டுப் பூ இங்கு எப்படி என யோசிக்கும் போதே ..மீண்டும் கண் சிக்கியது....சிரிப்பும் ..முக வதனமும் ..அவள் தான் என உறுதிபடுத்த ஆழ்ந்த தயக்கத்துடனே ..அம்மிணி நாடி ..

மேடம் ஓர் ஆட்டோகிராப் கேட்டேன்....யார் நான் எனச் சொல்லாமல்

நீங்கள் யார் ..என வினவும் குரலில் இருந்த அதே தயக்கமும் அலட்டல் இல்லா பணிவும்...அவளின் உயரமும் வெற்றியும் புரிய வைத்தது....
என்றும் நீ என் வெற்றியின் திமிர்பிரியை யடி மகாராணி....

யார் நான் எனச் சொல்லியதும்..அய்யோ...என ஆனந்தமாடி
இருந்த இடைவெளியை எட்ட தள்ளி..நெருங்கி கட்டி...உடன் பிறந்த உயிர் போல் இறுக்கிய..இடை நெகிழ்வும்
இடை விடாத ஈர விரல் பிடிப்பு.....இன்னும் இருக்கிறது ஜோ நரம்புகளில்..நல் இசை மீட்டலாய்

அதிகம் பேசியதில்லை..ஆழ்ந்த கருத்துக்கள் பகிர்ந்ததில்லை
நம் சாட் பாக்ஸ் இதுவரை இருவரையும் இணைத்ததில்லை

ஆனால் எங்கிருந்து குதித்தம்ர்ந்தது இத்தனை பிரியம்
இருவர் மனதிலும்....
தேடல்களின் சுயம்பு நீ...மயக்கும் அன்பு உனது
எட்ட நின்றே கவரும் நேச காந்தம்........

வாருங்கள் என்று என்னையும் கதிரையும் அழைத்து சென்று
உனக்கே இருநாள் முன்பு அறிமுகமானவர்களிடம் எல்லாம்
என் தோழி என முகவுரை சொல்லி..இருக்கும் இடத்தை
ஆனந்த நிறைவாய் ஆக்கியது உன் ஆளுமைப் பிரியம்

எம் மதுரைத் தமிழை..எம் மறத்தமிழச்சியை
நான் எதிர்பாரமல் சந்தித்தது எத்தனை பேரின்ப மகிழ்வு என்று
வார்த்தை வடிக்க முடியவில்லை என்னால்

கலை முகம் ..களை முகம் தவிர.....இயற்கையின் மீதான
ஓர் தீரா நேசிப்பு கவின் முகம் கண்டேன் உன்னிடம்

எட்டு புத்தகம் வந்த போதும்..எட்டா உயரம் ஏறி நின்ற போதும்
நூறு கல்லூரிகளுக்கு மேல் பேசி...ஐம்பாதாயிரம் மரக் குழந்தைகள் விதையூன்றிய போதும்...எதுவும் தனதில்லை
என ...மகிழ்வு பணிவாய்....வேரடி அமர்ந்து வேம்ப்பம் பூ
ரசிக்கிறாய் பார்...
அடிமட்ட தொழிலாளிபெண்மை முதல்
அனைவரையும் தோள் கை போட்டு அணைக்கிறாய் பார்

இந்த பணிவும் பேரண்பும் ...
இஃது ஒன்றே போதும்...என் ஜோ...

என்றும் என்றென்றும்
என் அன்னை கொஞ்சும் ஆனந்த பிரியமாய்....ஆணிவேராய்

நிலம் இருக்கும் வரை
நீண்டு வேரூன்றுவாள் இம் மண்ணில் இதிகாச களஞ்சியமாய்

அன்பு வாழ்த்துக்கள் ஜோ.....
என் மண நாளை மகிழ்வு நாளாக்கியது உன்னின் முதல் சந்திப்பு

உன் பிறந்தநாளில் பிரியமுடன் வாழ்த்துகிறேன்

வாழியடி தோழி நீ..வானுயர் நேசமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..