Sunday, 3 May 2015

முத்த வாழ்த்துக்கள்....டா ..குட்டிமா


அன்பு மகளுக்கு.......... Lachumi Selvaraja
ஆயுள்நிறை செல்வத்துக்கு

ஆனந்த பிரியைக்கு
அம்மா என்றழைத்து

கழுத்து கட்டி கனிவாடும்
கவி குழந்தைக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

தாயென நீ அழைக்கும் போதெல்லாம்
தன்னிறைவாய் என்னில்
உள் சிலிர்க்கும் உயிர்கூடு

சொல்லும் மொழியும் கொஞ்சும்
என் செல்லமகள் கவி தொடுத்தால்

தைரியமும் துணிச்சலும் தளும்பிவழியும்
உன் குறும்புக் கோபங்களில்

ஆயிரம் மைல் அப்பால் இருந்து..அன்று நீ
அம்மா என்றழைத்த குரலையும் சிரிப்பையும்
சிந்தாமல் சிதறாமல் சேமித்து வைத்துள்ளேனடி
என் உணர்வுச் செவிகளில்

என் தம்பியவனை மாமா என்று அழைத்து
அவன் சொல்ல நான் உனக்கு அம்மாவாகி
நீ மடி கொஞ்சிய நேசக்கூடு....

முதலாய் நான் முகநூல் வந்த பாசக் கூட்டின்
தாய்மைவீட்டு காலங்கள்

எட்ட இருந்தே என்னை கட்டிக் கொஞ்சும் கருமகளே

மண்ணில் நான் பெண்ணாய் பிறக்கும் ஜென்மம்தோறும்
நீயே என் மகளாய் கருப்பைநிறைய

அன்னையிடம் ஆயுள்தவமிருக்கிறேன் தங்கமே

பொன்னாய்வந்த என் மகள் போற்றிபுகழ்பாட என்றும் நின்றுவாழும் நிலமாய் வாழ்வாள்,,,என்றே பெருமிதகசிவுடன்
கட்டியணைத்து உச்சிமுகர்கிறேன்

வாழியடி மகளே வசந்தபெருவாழ்வு

முத்த வாழ்த்துக்கள்....டா ..குட்டிமா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..