Tuesday, 19 May 2015

மீண்டும் மீளா.. களப்பலி காண..

விதைத்தவன்
விதையெழுந்தவன்
விதையானவன்

விதைந்தான்

உண்டு ருசிக்கும் முன்
அறுவடை களத்திலேயே

தின்று செமித்த
தரித்தரமே

சரித்திரங்களுக்குஎன்றும் சாவில்லை....

உயிர்த்தெழுவான்
ஈழ தேவன்.....

அகதி அகதியென
மார்அடித்து கதறும்
தாய்மை கருப்பை எங்கும்

உரு சேரும்......அணுத்துகளாய்

ஒளியேந்தி வருவான்
புலிக் கொடி புத்தமகன்

ஓலமேந்தி ஒப்பாரி
வைக்க கூட....
ஒரு துகளின்றி ....
உமைச் சூறையாடா....

காத்திரு சிங்களமே
எம் கரிகால சோழனிடம்

மீண்டும் மீளா..
களப்பலி காண...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..